சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகில் மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 1 இருந்தது. கடந்த மாதத்தில் அப்பகுதிக்கு வந்த ஒரு மர்ம கும்பல் காவலாள ிடம் சில ஆவணங்களை கொடுத்து செல்போன் டவர் செயலற்றுவிட்டது என்று கூறியுள்ளனர்.
அதன் பின்னர், செல்போன் டவரை கிரேனை வைத்து கழற்றி திருடிக் கொண்டு சென்றுள்ளனர். பராமரிப்பு பணிக்காக செல்போன் நிறுவனத்தை சேர்ந்த சில பணியாளர்கள் அப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது அங்கே இருந்த டவர் கோபுரத்தை காணவில்லை இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மேலாளர் தமிழரசனிடம் தெரிவித்தனர்.
பின்னர், மேலாளர் தமிழரசன் வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆராய்ச்சி செய்ததில் இந்த திருட்டில் ஈடுபட்டது, திருநெல்வேலி நாகமுத்து, தூத்துக்குடி சண்முகம், வாழப்பாடியை சேர்ந்த ராகேஷ் ஷர்மா என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 9 டன் டவர் இரும்பு, ஜெனரேட்டர் மற்றும் ரூ.6.46 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.