பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வருகின்றது. அடுத்த இலங்கை பாகிஸ்தானாக இருக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. எனினும் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு பல்வேறு வகைகளில் வீழ்ச்சியினை மீட்டெடுக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.
இலங்கை போல பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கியதாக கூறப்படும் நிலையில், அதன் அன்னிய செலாவணி கையிருப்பும் 7.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
இது ஒரு மாதத்திற்கு மேலாக இறக்குமதி செய்ய போதுமானதாக பார்க்கப்பட்டாலும், இதனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
வரலாறு காணாத சரிவில் ரூபாய்.. மீண்டும் ரூ.80 ஐ தாண்டி யுத்தம்.. இனி என்னவாகுமோ?

பாகிஸ்தான் ரூபாய் சரிவு
மேலும் அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டு வருகின்றது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த ஜூலை மாதம் 24%-க்கும் அதிகமாக பணவீக்கமானது உச்சம் தொட்டுள்ளது குற்ப்பிடத்தக்கது.

கத்தாரின் அறிவிப்பு
இதற்கிடையில் பாகிஸ்தான் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. இது அதன் நெருக்கடிக்கு மத்தியில் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றது.
பாகிஸ்தான் ஐஎம்எஃப்- ஐ மட்டுமே முழுமையாக நம்பாமல், மற்ற நாடுளிலும் முதலீட்டுக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. சமீபத்தில் கத்தாரின் முதலீட்டு அத்தாரிட்டி (Qatar Investment Authority) பாகிஸ்தானில் 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தது. கத்தாரின் இந்த அறிவிப்பானது பாகிஸ்தான் பல நெருக்கடியான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் வந்துள்ளது.

எங்களுக்கு போதுமானது கிடைச்சாச்சு
இது பாகிஸ்தான் மற்றும் கத்தார் இடையேயான உறவினை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், இது மிகவும் நல்லது. எங்களுக்கு தேவையானதை விட அதிகம். அவர்கள் பாகிஸ்தானில் முதலீடுகளை மேலும் அதிகரிக்க ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக விமான நிலையங்கள்., பாகிஸ்தான், துறைமுகங்கள், மின் உற்பத்தி, சோலார், பங்கு சந்தை என பலவற்றிலும் ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
பாகிஸ்தானின் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ம் உதவ முன் வந்துள்ளது. UAE-ம் பாகிஸ்தான் நிறுவனங்களில் 1 பில்லியன் டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முதலீடானது எரிவாயு, எரிசக்தி உள்கட்டமைப்பு, புதுபிக்கதக்க ஆற்றல், சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சவுதி அரேபியா
சவுதி அரேபியாவும், பாகிஸ்தானில் 1 பில்லியன் டாலர் முதலீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர சர்வதேச அளவில் நிலவி வரும் பிரச்சனைகள் என பலவற்றை பற்றியும் தொலைபேசியில் சவுதியில் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியதாகவும் ,இந்த முதலீடு குறித்து சவுதி மன்னர் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சீனாவின் நிலைப்பாடு?
சமீபத்திய காலமாகவே பாகிஸ்தானில் சீனாவின் முதலீடு என்பது குறைந்துள்ளது. குறிப்பாக நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 56% சரிவினைக் கண்டுள்ளது.
சீனாவே தற்போது பற்பல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதன் முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன. ஆக தற்போதைக்கு பாகிஸ்தான் சீனாவில் முதலீடு செய்ய வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே பார்க்கப்படுகிறது.

ஐஎம்எஃப் பேச்சு வார்த்தை முக்கியம்
மேற்கண்ட பல நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தாலும், தொடர்ந்து பாகிஸ்தான் அரசு, ஐஎம்எஃப் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. கடந்த வாரத்தில் பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் கடன் வசதி குறித்து ஆக்ஸ்ட் 29 அன்று பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது. ஆக விரைவில் இது குறித்த அப்டேட் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
From Qatar to UAE countries that have recently willing to invest in pakistan
From Qatar to UAE countries that have recently willing to invest in pakistan/தோள் கொடுப்பான் தோழன்.. பரிதவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ வந்த கத்தார் முதல் UAE வரை.. எப்படி?