சென்னை:
புஷ்பா
மற்றும்
பருத்தி
வீரன்
படங்களை
ஒப்பிட்டு
சீமான்
பேசிய
பேச்சு
சமூக
வலைதளங்களில்
டிரெண்டாகி
வருகிறது.
நாம்
தமிழர்
கட்சியின்
ஒருங்கிணைப்பாளரான
சீமான்
தமிழ்
சினிமாவில்
இயக்குநராகவும்
நடிகராகவும்
பல
படங்களில்
பணியாற்றி
உள்ளார்.
பாஞ்சாலங்குறிச்சி
படத்தில்
ஆரம்பித்து
தம்பி
வரை
பல
படங்களை
இயக்கி
உள்ளார்
சீமான்.
சினிமாவில்
சிமான்
1996ம்
ஆண்டு
பிரபு
நடிப்பில்
வெளியான
பாஞ்சாலங்குறிச்சி
படம்
மூலம்
இயக்குநராக
அறிமுகமானவர்
சீமான்.
இனியவளே,
வீரநடை,
தம்பி
மற்றும்
வாழ்த்துக்கள்
உள்ளிட்ட
படங்களை
அவர்
இயக்கி
உள்ளார்.
மாதவனின்
தம்பி
படம்
சீமானுக்கு
பெரும்
பெயரையும்
புகழையும்
ரசிகர்களையும்
பெற்றுத்
தந்தது.
நடிகராக
அமைதிப்படை
படத்தில்
இருந்து
2019ல்
வெளியான
தவம்
வரை
பல
படங்களில்
நடித்துள்ளார்.

பன்முகத்தன்மை
சிம்பு,
தனுஷ்
போல
இவரும்
பாடல்களை
எழுதியும்
பாடியும்
உள்ளார்.
இவர்
இயக்கத்தில்
வெளியான
பாஞ்சாலங்குறிச்சி,
வீரநடை,
இனியவளே
உள்ளிட்ட
படங்களில்
இவர்
பாடல்களை
எழுதியுள்ளார்.
தேவா
அந்த
படங்களுக்கு
இசையமைத்துள்ளார்.
மாயாண்டி
குடும்பத்தார்
படத்தில்
சபேஷ்
முரளியின்
இசையில்
“பேசாம
பேசாம”
என்கிற
பாடலை
இவர்
பாடி
உள்ளார்.

புஷ்பால
ஒரு
றெக்கையை
தூக்கினா
சினிமாவில்
இருந்து
சினிமாவுக்கு
வந்த
பிரபலங்களில்
முக்கியமானவரான
சீமான்
அரசியல்
மாநாடுகளில்
சில
சமயங்களில்
படு
ஜாலியாக
பேசுவதும்
வழக்கம்.
இந்நிலையில்,
சமீபத்தில்
அவர்
புஷ்பா
படத்துல
ஒரு
றெக்கையை
அப்படித்
தூக்கிட்டு
கெத்தா
நடந்தா,
தமிழன்
நீ
இரண்டு
கையை
இப்படி
கெத்தா
தூக்கிட்டு
நட
என
போஸ்
கொடுத்து
பேசியது
டிரெண்டாகி
வருகிறது.

மாட்டுக்கறி
சாப்பிட்டால்
மிகவும்
சோர்வா
இருந்தால்
அரை
கிலோ
மாட்டுக்கறி
வாங்கி
சாப்பிடு
தெம்பா
ஆகிடுவ,
இரண்டு
மாசத்துக்கு
ஜிம்முக்கு
போ,
அதிக
பட்சம்
600
ரூபாய்
கேட்பான்,
உடம்பை
நல்லா
ஏத்து
என
இளைஞர்களுக்கு
கட்டுமஸ்த்தான
உடல்வாகை
மெயின்டெயின்
பண்ண
டிப்ஸ்களும்
கொடுத்து
சீமான்
பேசியுள்ளார்.

கார்த்தி
போல
நட
மேலும்,
பருத்திவீரன்
படத்தில்
கார்த்தி
எப்படி
நெஞ்சை
நிமிர்த்திக்
கொண்டு
நடப்பாரா
அது
போல
நெஞ்சை
நிமிர்த்திக்
கொண்டு
கெத்தாக
நடக்க
வேண்டும்
என
சீமான்
அந்த
மேடையில்
பேசி
உள்ளார்.
நீண்ட
நாட்களுக்குப்
பிறகு
சினிமா
படங்களையும்
நடிகர்களையும்
உதாரணமாகக்
கொண்டு
இளைஞர்கள்
ஃபிட்டாக
இருக்க
வேண்டும்
என
சீமான்
பேசிய
பேச்சு
இளைஞ்ர்களின்
கவனத்தை
ஈர்த்துள்ளது.