ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கவர தன்னார்வ அமைப்பு புது முயற்சி…

ஈரோடு : ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியாக அவர்களை சுற்றுலா அழைத்து செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரவலுக்கு பின் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் பள்ளிகள் தொடங்கப்பட்ட போதிலும் மலை கிராமங்களில் பழகுடியின குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வருவது சிக்கல் நீடித்து வருகிறது. குடும்ப பொருளாதாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல காரணங்களால் ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களான பர்கூர், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 100கும் … Read more

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நீதிபதி சந்துரு குழு அரசிடம் அறிக்கை அளித்த நிலையில், உள்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

குறுகிய கால விவசாய கடன்களுக்கான வட்டி மானியம் வழங்க ரூ.34,856 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாய கடன்களுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் வழங்க ரூ.34,856 கோடியை ஒதுக்கீடு செய்து, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாய கடன்களுக்கு ரூ.1.5 சதவீத வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டு முதல் 2024-25 … Read more

சிபிஐ விசாரணை உத்தரவை திரும்பப்பெற வேண்டும் – பொன்.மாணிக்கவேல் முறையீடு

தன் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்க வேலுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில், அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிடக் கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.-யாக … Read more

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் பயணிக்க தனி பயணச்சீட்டு வாங்கணுமா? ரயில்வே விளக்கம்!

ரயில்களில் 1 முதல் 4 வயதுள்ள குழந்தைகளுக்கு தனியாக பயணச்சீட்டு வாங்க வேண்டும் என வெளியான தகவல்கள் தவறு என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 6, 2020-ல் ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டது. அதன்படி இப்போதுவரை 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகள் இலவசமாக பயணித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தனி படுக்கையோ அல்லது இருக்கையோ வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் … Read more

வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு – பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

India oi-Mathivanan Maran ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு. 2 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், … Read more

பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,608 பேருக்கு கோவிட் உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4,42,98,864 ஆனது. கோவிட்டிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,36,54,064 ஆனது. கோவிட் பாதித்த 72 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,27,206 ஆனது. தற்போது 1,01,343 பேர் … Read more

ராஷ்மிகாவுடன் காதலா.. விஜய் தேவரகொண்டா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

ஐதராபாத் : விஜய் தேவரகொண்டா தெலுங்கு மட்டுமில்லாமல் தன்னுடைய படங்கள் மூலம் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பான் இந்தியா ஸ்டாராக தொடர்ந்து வலம் வருகிறார். இவருக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர். இவரது ஒவ்வொரு ஸ்டைலும் ட்ரெண்டாக்கப்பட்டு வருகின்றன. விஜய் தேவரகொண்டா அதிகமான படங்களில் நடித்துள்ள போதிலும் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் இவரது கேரியர் பெஸ்ட்டாக உள்ளன. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் … Read more

14 ஆண்டுகளுக்கு பின் விலை உயரும் நூடுல்ஸ்… இந்த ஒரே ஒரு காரணம் தான்!

தாய்லாந்து நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது நூடுல்ஸ் விலையை உயர்த்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என தாய்லாந்து அரசிடம் நூடுல்ஸ் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாய்லாந்து நாட்டை பொருத்தவரை நூடுல்ஸ் என்பது பெரும்பாலான மக்கள் சாப்பிடும் உணவு என்பதால் அந்த உணவின் விலை ஏற்றத்தை அரசாங்கத்தின் அனுமதி கொண்டே ஏற்ற வேண்டும். எனவே 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயராமல் இருக்கும் நிலையில் தற்போது தயாரிப்புக்கு அதிக செலவு … Read more