சென்னை : நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டுள்ளது.
தமிழ் பண்டிகைகளில் முதல் பண்டிகையாக கருதப்படும் விநாயகர் சதுர்த்தியை பிரபலங்களும் ஆர்வத்துடன் கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
அந்த வகையில் நடிகை ஷிவானி நாராயணனும் தன்னுடைய வீட்டில் மிகவும் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
நடிகை ஷிவானி நாராயணன்
நடிகை ஷிவானி நாராயணன் மாடலிங் மூலமே நடிக்கும் வாய்ப்பை பெற்றார். திரையில் முதலில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற நிலையில் சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அதை பச்சக் என்று பிடித்துக் கொண்டார். விஜய் டிவியின் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில்தான் இவரது அறிமுகம் இருந்தது.

அடுத்தடுத்த சீரியல்கள்
தொடாந்து பகல் நிலவு தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதன்மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதையடுத்து ஜீ தமிழில் இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்த தொடர்களில் நாயகியாக நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தொடர்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
இரட்டை ரோஜா தொடரில் இரண்டு ரோல்களில் நடித்து சிறப்பான நடிப்பின்மூலம் பல விருதுகளையும் தட்டியுள்ளார். தன்னுடைய சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஷிவானி நாராயணன். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் கவர்ந்து வருகிறார்.

விக்ரம் படத்தில் ஷிவானி
சமீபத்தில் இவரது நடிப்பில் விக்ரம் படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிறிய கேரக்டராக இருந்தாலும் இந்த ரோல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
எப்போதும் கவர்ச்சிப் பகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்துவரும் ஷிவானி, அழகான புடவையில் இந்தப் புகைப்படங்களில் அம்சமாக காணப்படுகிறார். இவருக்கு கவர்ச்சிப் புகைப்படங்களும் சிறப்பாக அமைகிறது. அதேபோல புடவையிலும் சிறப்பாக காணப்படுகிறார் ஷிவானி. ரசிகர்களின் லைக்ஸ்களும் இந்தப் புகைப்படங்களுக்கு அதிகமாக காணப்படுகிறது.