இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பும் டிமாண்ட்-ம் அதிகமாக இருக்கும் வேளையில், பல புதிய நிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைந்து வருகிறது.
இதன் வரிசையில் Livpure மற்றும் Livguard போன்ற வாட்டர் பியூரிபையர் பிராண்டுகளுக்குச் சொந்தக்காரர் ஆன SAR குழுமம் சுமார் 1400-1500 கோடி முதலீட்டு உடன், அதன் Lectrix பிராண்ட் கீழ் இப்போது மின்சார இரு சக்கர வாகனச் சந்தையில் நுழைகிறது.
SAR குழுமம் ஏற்கனவே வர்த்தகச் சந்தையில் இருந்தாலும், தற்போது நேரடியாக மக்களுக்கான வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
100 ரூபாய் பேடிஎம் பணப்பரிமாற்றம்.. ரூ.4 கோடி நகை கொள்ளையை கண்டுபிடித்த போலீஸ்!

SAR குழுமம்
SAR குழுமத்தின் Lectrix நிறுவனம் ஏற்கனவே டெலிவரி பிரிவுக்கு எலகட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது அதன் முதல் ஸ்கூட்டரை நுகர்வோருக்கு அதாவது மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ராகேஷ் மல்ஹோத்ரா
SAR குழுமத்தின் நிறுவனர் ராகேஷ் மல்ஹோத்ரா கூறுகையில், இந்த மாடல்களை உருவாக்குவதற்கும் ஹரியானாவில் உள்ள மனேசரில் ஒரு உற்பத்தி தளத்தை அமைப்பதற்கும் இதுவரை சுமார் 300 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.

150,000 யூனிட்கள்
மானேசர் தொழிற்சாலை மூலம் தற்போது ஆண்டுக்கு 150,000 யூனிட்கள் வரை உற்பத்தி செய்ய முடியும் என ராகேஷ் மல்ஹோத்ரா கூறுகிறார். கடந்த வாரம், லெக்ட்ரிக்ஸ் தனது முதல் ஷோரூமை திறந்தது குறிப்பிடத்தக்கது.

160 விற்பனையகங்கள்
இந்நிலையில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மக்களுக்கான வாகனங்களை விற்பனை செய்ய இந்தியாவில் சுமார் 150-160 விற்பனையகங்களை அமைக்கத் திட்டமிட்டு உள்ளதாக ராகேஷ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

Lectrix நிறுவனம்
150 விற்பனையகங்களை உருவாகுவதற்குள் ஒரு மாதத்திற்கு 5,000 வாகனங்களை விற்பனை செய்யும் அளவிற்கு வர்த்தகத்தை விரிவாக்கச் செய்யத் திட்டமிட்டு வருகிறது Lectrix நிறுவனம். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் ஏற்கனவே கடுமையான போட்டிக்கள் இருந்த காரணத்தாலும்
SAR Group to invest up to Rs 1,500 crore in e-bike foray
SAR Group to invest up to Rs 1,500 crore in e-bike foray எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் வாட்டர் பியூரிபையர் நிறுவனம்.. ரூ.1500 கோடி முதலீடு..!