மும்பை : பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் -ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் சமீபத்தில் குட் லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓடிடியில் ரிலீசானது.
இந்தப் படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.
தற்போது ஜான்வி கபூர் கடற்கரையில் அலைகளுக்கு நடுவே படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழி சினிமாவில் ஜாம்பவான திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் 2018ம் ஆண்டு இஷான் தடக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த படத் கைராக் என்ற மராத்தி மொழியின் ரீ மேக் ஆகும்.

கிசுகிசு
முதல் படத்திலேயே அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்ற ஜான்வி கபூர், அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவரும் திடீரென பிரிந்து விட்டார். தற்போது இவர், தோஸ்தானா 2 படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யனை ரகசியமாக சந்திப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

விரைவில் தென்னிய மொழிகளில்
ஜான்வியின் தந்தை போனி கபூரும் தற்போது அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக தமிழ்ப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தென்னிந்திய மொழிகளிலும் ஜான்வி விரைவில் நாயகியாக அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஹாட் பிகினி
ஜான்வி கபூர் கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா தி கார்கிள் கேர்ள் , தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா ஆகிய படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். என்னத்தான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவில் படு சுறுசுறுப்பாக இருக்கும் ஜான்வி கபூர் கடற்கரையில் அலைகளுக்கு நடுவே படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை கடலையே சூடாக்கிவிட்டாய் ஜான்வி என வர்ணித்து வருகின்றனர். ஒரு சிலர் ஓவர் அட்ராசிட்டியா இருக்கே என கருத்துக்களை கூறி வருகின்றனர்.