சாதாரண மாணிக்கம்.. பம்பாய் போய் பாட்ஷா ஆகுறது தான் கதையா? சிம்பு பட டிரைலரை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்

சென்னை: இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உடல் எடையை குறைத்து ரொம்ப ஒல்லியாக சிம்பு அப்படி என்ன படத்தில் நடித்து வருகிறார் என ரசிகர்கள் வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலருக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா என ஏகப்பட்ட அலப்பறைகளுடன் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலரை பார்த்த பின்னர் பல படங்களின் காப்பி தானா இந்த படமும் என அப்செட் ஆகி உள்ளனர்.

கோலிவுட்டின் கேஜிஎஃப் என்றும் நாயகன், பாட்ஷா வரிசையில் இன்னொரு கேங்ஸ்டர் படமா? என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு டிரைலர்

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் நேற்று பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியுடன் வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

என்ன கதை

என்ன கதை

டிரைலரை பார்த்த ரசிகர்கள் புதிய படம் பார்த்ததை போலவே இல்லையே என்றும் ஏற்கனவே பார்த்த காட் ஃபாதர், பாட்ஷா, நாயகன், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களை போலவே இருக்கே என ஏகப்பட்ட மீம்களையும் ட்ரோல்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர். சிம்பு ரசிகர்கள் நடிகர் சிம்புவின் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் டிரான்ஸ்ஃபர்மேஷனை பார்த்து மிரண்டு போயுள்ளனர்.

கேஜிஎஃப் பாதிப்பா

கேஜிஎஃப் பாதிப்பா

கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தில் நடித்து வரும் சிம்பு, சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸை ரூல் செய்த யஷ்ஷின் கேஜிஎஃப் படத்தின் பாதிப்பால் இப்படியொரு படத்தில் நடித்துள்ளாரா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர்.

மாணிக்கம் பாட்ஷா ஆகுறாரா

மாணிக்கம் பாட்ஷா ஆகுறாரா

ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தில் பாட்ஷா மாணிக்கமாக மறைந்து அமைதியான வாழ்க்கையை வாழ்வார். ஆனால், இங்கே சாதாரண மாணிக்கம் பம்பாய் சென்று அடியாளாக மாறி பாட்ஷா ஆவது தான் கதையா? என டிரைலரை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

என்கேஜா இருந்தா

என்கேஜா இருந்தா

இயக்குநர் கெளதம் மேனன் காட் ஃபாதர் படத்தின் பரம ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏற்கனவே அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டாம் பாதியில் காட்ஃபாதர் படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். எப்படி இருந்தாலும், படம் ரசிகர்களை என்கேஜ் பண்ணா ஓடும் என்பதற்கு ஏகப்பட்ட கேங்ஸ்டர் படங்கள் சாட்சியாக உள்ள நிலையில், முத்து பாய் என்ன பண்ணப் போறாரு என்பதை படம் பார்த்து முடிவு செய்யலாமே!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.