பறிமுதல் செய்யப்பட்டவை ரூ.3 ஆயிரம் கோடிக்கு செம்மர கட்டை ஏலம்; ஆந்திர அரசு முடிவு

திருமலை: ஆந்திராவில் செம்மர கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் திருப்பதி, கடப்பா ஆகிய இடங்களில் உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 5,700 டன் செம்மரக்கட்டைகள் உள்ளன. இதில், 2,640 டன் கட்டைகளை மட்டும் வரும் அக்டோபர் முதல் 2023 ஆண்டு மார்ச் வரை பல்வேறு கட்டங்களாக ஏலம் விட்டு, அரசுக்கு ரூ.3,000 கோடி நிதி திரட்டபட உள்ளது. இந்த ஏலத்துக்கு ஒன்றிய அரசும் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகளும் ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, 2014 – 2018ம் ஆண்டு வரை 1,251 டன் செம்மரக்கட்டைகள் விற்கப்பட்டது. இதன் மூலம், ரூ.505 கோடி வருவாய் கிடைத்தது. இந்த கட்டைகளுக்கு சீனா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக செம்மரக்கட்டைகளை விற்று வருவாய் ஈட்ட, முதல்வர் ஜெகன் முடிவு செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.