வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீடு.. கலக்கலான ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி!

சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் வரும் செப்டம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது வெந்து தணிந்தது காடு.

இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்துள்ளார் சித்தி இத்னானி. சிம்பு கிராமத்து மற்றும் நகரத்து கெட்டப்புகளில் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

ஏஆர் ரம்இன்றைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு தேர்ந்தெடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் முதிர்ச்சி காணப்படுகிறது. அவரது சமீபத்திய படமான மாநாடு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். டைம் லூப் அடிப்படையிலான இந்தப் படத்தில் ஒரே மாதிரியான காட்சியமைப்புகள் அடுத்தடுத்து வந்த நிலையிலும் அவரது நடிப்பு சலிப்பை ஏற்படுத்தவில்லை.

மஹா படத்தில் கவனம்

மஹா படத்தில் கவனம்

இந்நிலையில் அடுத்ததாக மஹா என்ற படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்திருந்தார். கேமியோ கேரக்டராக அமைந்த நிலையிலும் இந்தப் படத்தின் கேரக்டரிலும் வித்தியாசத்தை காட்டியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ஹன்சிகா மற்றும் சிம்புவின் கேரக்டர்கள் கவனம் பெற்றன.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

தொடர்ந்து தன்னுடைய கேரக்டர்களில் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. இதனிடையே தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மாநாடு கொடுத்த வெற்றியால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வித்தியாசமான கெட்டப்

வித்தியாசமான கெட்டப்

கிராமத்து இளைஞனாகவும் நகரத்து இளைஞனாகவும் இந்தப் படத்தில் வித்தியாசம் காட்டியுள்ளார் சிம்பு. வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு மிரட்டும் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. சித்தி இத்னானி ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தில் சிம்புவின் நடிப்பு கண்டிப்பாக வரவேற்பு பெறும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த டைட்டில்

ரசிகர்களை கவர்ந்த டைட்டில்

கௌதம் மேனன் -சிம்பு கூட்டணியில் முன்னதாக வெளியான விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்கள் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ள நிலையில், அதே பாணியிலான டைட்டிலில் வெளியாகவுள்ள வெந்து தணிந்தது காடு படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

சிறப்பு விருந்தினர் கமல்

சிறப்பு விருந்தினர் கமல்

வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு இன்றைய தினம், பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள நிலையில், உதயநிதி, ஏஆர் ரஹ்மான் மற்றும் படக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி

ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி நடத்தவுள்ளார். படத்தின் பாடல்களும் இசைக்கப்படவுள்ளன. மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் சிம்புவின் ரசிகர்கள் பங்கேற்க வந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.