கோல்கட்டா : திட மற்றும் திரவக் கழிவுகளை சுத்திகரிக்க தவறிய மேற்கு வங்க அரசு, 3,500 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் இழப்பீடு அளிக்கும்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள நகர்ப்புறங்களில், திட மற்றும் சுற்றுச்சூழல் கழிவுகளை சுத்திகரிக்க அரசு தவறியதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:நகர்ப்புறங்களில், திட மற்றும் திரவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் மாநில அரசு அலட்சியத்துடன் செயல்பட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, திரவக் கழிவுகளை சுத்திகரிக்க தவறியதால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 3,000 கோடி ரூபாயும், திடக் கழிவுகளுக்கு 500 கோடி ரூபாயும் இழப்பீடாக அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.இந்த தொகையை தனி வங்கி கணக்கு துவங்கி, அதில் டிபாசிட் செய்து, சுத்திகரிப்பு பணிளுக்காக மட்டுமே செலவிட வேண்டும்.
திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் உள்ள குளறுபடிகளை ஆறு மாதங்களில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை, தலைமை செயலர் மாதத்திற்கு ஒருமுறை தனி கவனம் எடுத்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement