இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் புதிதாக 6 விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த ஆண்டு 38 புதிய விமானங்களை அறிமுகப்படுத்திய இண்டிகோ, தற்போது வெளிநாட்டு விமான பயணத்தையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்க இண்டிகோ நிறுவனம் 6 புதிய விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளதால் வெளிநாட்டு விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விமான நிறுவனங்கள் போட்டா போட்டியில் கட்டணம் குறைப்பு.. மகிழ்ச்சியில் பயணிகள்!

இண்டிகோ விமானங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் 6 புதிய விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விமானங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஐதராபாத் – தோஹா
ஐதராபாத்தில் இருந்து ரியாத்துக்கு ஒரு புதிய தினசரி நேரடி விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஐதராபாத்தில் இருந்து தோஹா வரை புதிய விமானம் இயக்கப்படும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது. அதேபோல் மங்களூர்-துபாய் இடையே ஒரு புதிய விமானம் இயக்கப்படும் என்றும், மேற்கண்ட மூன்று வழித்தடங்களிலும் மறுமுனையில் இருந்தும் இயக்கப்படும் என தெரிகிறது.

தினசரி விமானங்கள்
அக்டோபர் 30 ஆம் தேதி முதல் ஐதராபாத் முதல் தோஹா வரையிலும், அதேபோல் ஐதராபாத் முதல் ரியாத் வரையிலான விமானங்களைத் தொடங்க இண்டிகோ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மங்களூரிலிருந்து துபாய்க்கு அக்டோபர் 31 முதல் புதிய விமானம் இயங்கும்.

சுற்றுலா தலங்கள்
இண்டிகோவின் தலைமை வருவாய் அதிகாரி சஞ்சய் குமார் அவர்கள் இந்த புதிய விமானங்கள் இயக்கப்படுவது குறித்து கூறியபோது, ‘ரியாத் உடனான புதிய இணைப்பு வணிக இணைப்பை மேம்படுத்தும். அதேபோல் அல் மஸ்மாக் கோட்டை, தேசிய அருங்காட்சியகம், ஹீட் குகைகள், இமாம் துர்கி பின் அப்துல்லா கிராண்ட் மசூதி மற்றும் கிங்டம் சென்டர் டவர் போன்ற சுற்றுலா தலங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் இருக்கும்.

மலிவு விலையில் பயணம்
மேலும் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எங்கள் விமானங்களில் மலிவு விலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்யலாம்’ என்று சஞ்சய் குமார் அவர்கள் கூறியுள்ளார்.
IndiGo to launch 6 new flights to add to its connectivity between India and Middle East
IndiGo to launch 6 new flights to add to its connectivity between India and Middle East | இண்டிகோவின் 6 புதிய நிறுவனம்.. வெளிநாடு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி!