பெங்களூர்: இந்தியாவில் ஐடி துறைக்குத் தலைநகராக விளங்கும் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வீடுகள் மட்டும் அல்லாமல் பெரிய பெரிய டெக் பார்க், பயோ டெக் பார்க் நிறுவனங்களிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் திங்கட்கிழமை பெரும்பாலான ஊழியர்களை மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட நிலையில், இன்று அனைத்து பெங்களூர் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துள்ளது.
சென்னை தான் மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறது என்ற பேச்சு நிலவி வந்த நிலையில் தற்போது பெங்களூர் 2900 அடி உயரத்தில் இருந்தும் சரியான உள்கட்டமைப்பு இல்லாத காரணத்தால் தற்போது பெங்களூர் முழுவதும் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ளது.
உலகம் முழுவதும் டெக் ஊழியர்கள் பணிநீக்கம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பா..?

பெங்களூர்
பெங்களூரின் நிலையை வேகமாகச் சமாளிக்க 30 பேர் கொண்ட இரண்டு மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) அமைத்து மோசமாகப் பாதித்துள்ள மகாதேவபுரா மற்றும் பொம்மனஹள்ளி பகுதிகளை முதலில் சரி செய்யும் பணிகளைத் துவங்க உத்தரவிட்டு உள்ளார் பசவராஜ் பொம்மை. இந்தப் பகுதிகளில் பல ஐடி மற்றும் பயோடெக் நிறுவனங்கள் உள்ளது.

பசவராஜ் பொம்மை
மேலும் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை விரைவில் ஐடி மற்றும் பயோடெக் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பெங்களூரின் முக்கியப் பகுதியாக விளங்கும் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் இருக்கும் நிறுவனங்களின் அமைப்புத் திங்கட்கிழமை நிலைமை சரியாகும் வரையில் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு வெளியாகியுள்ளது.

டிராக்டர்
அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் மட்டும் சுமார் 500க்கும் அதிகமான டெக் நிறுவனங்கள் உள்ளது, மேலும் திங்கட்கிழமை கடும் போராட்டத்திற்குப் பின் அலுவலகம் சென்றவர்கள் டிராக்டரில் தான் வீடு திரும்பியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

ஆடம்பர வீடுகள்
பெங்களூரில் ஆடம்பர வீடுகள் அதிகம் இருக்கும், சிஇஓ, கிரிக்கெட் வீரர்கள் போன்றோர் விரும்பி வீடு வாங்கும் பகுதியான யமலூர் மற்றும் HAL சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் டிராக்டர் மற்றும் போட்டில் தான் பாதுகாப்பான இடத்திற்குத் திரும்பியுள்ளனர்.

பெங்களூர் மதிப்பீடு
பெங்களூரில் ஏற்பட்ட இந்த மோசமான வெள்ளம் உலகளவில் வர்த்தகத் துறையில் இந்நகரம் மீதான பார்வை மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை, மோசமான உள்கட்டமைப்பு காரணமாகவே இத்தகைய நிலை ஏற்பட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது. இதேபோல் பசவராஜ் பொம்மை மழை வெள்ளம் பிரச்சனையைச் சரியாகக் கையாளவில்லை என்று விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
Bengaluru IT employees back to WFH, travelling in Tractor; rainfall flash floods affected whole city
Bengaluru IT employees back to WFH, travelling in Tractor; rainfall flash floods affected whole city பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் WFH.. மழை வெள்ளத்தில் மூழ்கிய அலுவலகங்கள்..!