”ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் ரெண்டுமே வேற வேற மாதிரி”: பங்கமாய் கலாய்த்த கார்த்தி

சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்தப் படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவரது கேரக்டர் குறித்து கார்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்திக்கு அடித்த ஜாக்பாட்

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ரஜினி, கமல், இயக்குநர் ஷங்கர் உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தில் வந்தியத்தேவன் பாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படம் 90களில் உருவாகியிருந்தால், கமல் வந்தியத் தேவனாக நடித்திருப்பார். ஆனால், அது இப்போது கார்த்திக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம்

ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம்

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கார்த்தி, படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது “பல ஆண்டுகள் தமிழ் மக்கள், தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு தருணம் இது. பொன்னியின் செல்வன் படம் வரப்போகிறது இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. மற்ற படங்களில் பணியாற்றும் போது சிந்தனைகள் வெளியே சென்றுவரும் இதில் சிந்தனை அந்த பாத்திரத்திலேயே இருக்கும். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் இதே உணர்வு தான் இருந்தது. கோலிவுட்டின் அனைத்து பெரிய நடிகர்களும் இப்படத்தில் இருக்கிறார்கள் மொத்த தமிழ் திரையுலகையும் பொன்னியின் செல்வன் படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் அன்பு எப்பொழுதும் தேவை” என பேசினார்.

வந்தியத்தேவன் தான் ஸ்பெஷல்

வந்தியத்தேவன் தான் ஸ்பெஷல்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “பொன்னியின் செல்வன் படத்தில் எல்லா பாத்திரங்களும் மிக முக்கியமானவை. ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதி பாத்திரங்கள் உண்மையாக வாழ்ந்தவை மீதி கற்பனையாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், வந்தியத்தேவன் எல்லா பாத்திரத்தையும் சந்திக்கக் கூடியது. அதனால் எல்லாரிடமும் ஒரேமாதிரி பேச முடியாது. உடல்மொழி பேசுகிற மொழி எல்லாம் ஒவ்வொருவரிடமும் மாறும்” எனக் கூறினார்.

புரியாம பேசாதீங்க - கலாய்த்த கார்த்தி

புரியாம பேசாதீங்க – கலாய்த்த கார்த்தி

அப்போது செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் சோழன் பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கார்த்தி, “ஆயிரத்தில் ஒருவனில் சோழ தூதுவனாக நடித்திருந்தேன். நீங்க கதையை புரிந்துகொண்டு வாங்க” என சிரித்துக்கொண்டே பதிலளித்தார். மேலும் பொன்னியின் செல்வனுக்கும் ஆயிரத்தில் ஒருவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இரண்டு படங்களிலும் எனது கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.