எழுச்சி தரும் எழுத்தறிவு! :இன்று உலக எழுத்தறிவு தினம் -| Dinamalar

ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேச, எழுத தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். இது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். உலகில் 77 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் பெண்கள். ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1967 முதல் செப்., 8ல் உலகஎழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.’எழுத்தறிவு மற்றும் பன்மொழி பேசுதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.

எது எழுத்தறிவு

ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. எழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும்.

என்ன பயன்

எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயம் போன்றது. கல்வி என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத் திகழ்கிறது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.