இந்தியா வர்த்தகச் சந்தையில் தற்போது அம்பானியும், அதானியும் நேருக்கு நேர் போட்டிப்போட்டு வரும் நிலையில், தற்போது முகேஷ் அம்பானிக்கு ஒரு படி மேல் சென்று கௌதம் அதானி 3 புதிய ஜிகா பேக்ட்ரியை கட்ட முடிவு செய்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்கால வளர்ச்சி அனைத்தும் தற்போது குஜராத் ஜாம்நகரில் கட்டப்படும் 5 ஜிகா பேக்டரி-யை நம்பி மட்டுமே இருக்கும் நிலையில், இதற்குப் போட்டியாகக் கௌதம் அதானி இதே திட்ட வடிவில் 3 புதிய ஜிகா பேக்டரியை கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கௌதம் அதானி.
கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் வேளையில் இந்த 3 ஜிகா பேக்டரி திட்டம் மூலம் 2வது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
அடி மேல் அடி வாங்கும் பாகிஸ்தான்.. இது போறாத காலம்.. என்ன செய்ய போகிறது?

கௌதம் அதானி
கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் தற்போது கிளீன் எனர்ஜி துறையில் அதிகப்படியான கவனத்தைத் செலுத்தி வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுகள் கிளீன் எனர்ஜி பிரிவில் மட்டும் சுமார் 70 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார்.

3 ஜிகா பேக்டரி
இந்த 70 பில்லியன் டாலர் முதலீட்டில் சோலார் மாடியூல், வின்டு டர்பைன், ஹைட்ரஜென் எலக்ட்ரோலைசர்ஸ் ஆகியவற்றைத் தயாரிக்கும் 3 ஜிகா பேக்டரியை கட்ட முடிவு செய்துள்ளது அதானி குரூப். இது உலகின் மிகப்பெரிய integrated green-energy value chains ஆக இருக்கும் எனக் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

உற்பத்தி
இந்த 3 ஜிகா பேக்டரியில் பாலிசிலிக்கான் முதல் சோலார் மாடியூல் வரையும், wind turbines-ஐ முழுமையாக உற்பத்தி செய்யவும், hydrogen electrolyzers-ஐ முழுமையாக உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

45 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி
இந்த 3 ஜிகா பேக்டரி மூலம் அதானி குரூப் தற்போது இருக்கும் 20 ஜிகாவாட் எனர்ஜி உற்பத்தியுடன் புதிதாக 45 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எனர்ஜியை உற்பத்தி செய்யப்பட உள்ளது. 2030க்குள் 30 லட்சம் டன் ஹைட்ரஜென் வாயுவை உற்பத்தி செய்ய உள்ளது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி சில நாட்ளுக்கு முன்பு நடந்த 45வது வருடாந்திர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பொதுக்கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 4 ஜிகா பேக்டரியை சேர்த்து 5வது ஜிகா பேக்ட்ரியை பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் துவங்க உள்ளதாக அறிவித்தார்.

கௌதம் அதானி
இதைத் தொடர்ந்து கௌதம் அதானி தற்போது 3 புதிய ஜிகா பேக்டரியை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஜிகா பேக்டரி என்றால் ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஓரே பொருளை ஒரே தொழிற்சாலை செய்யப்படுவது தான் ஜிகாபேக்ட்ரி. இதனாலேயே ஜிகாபேக்டரி என்பது எப்போதுமே பெரியதாக இருக்கும்.
Adani Group to build 3 giga factories with $70 billion invest in clean energy sector
Adani Group to build 3 giga factories with $70 billion invest in clean energy sector கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!