கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி..? அதன் நன்மைகள் என்ன..?

கிசான் கிரெடிட் கார்டு யோஜனா என்பது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்குக் குறுகிய காலக் கடன் வழங்கும் திட்டமாகும்.

பயிர் சாகுபடி, அறுவடை மற்றும் அவர்களின் விளைபொருட்களைப் பராமரிக்கும் போது விவசாயிகள் அனுபவிக்கும் எந்தவொரு நிதிக் பற்றாக்குறையைத் தீர்க்கும் முயற்சியில் இது ஆகஸ்ட் 1998 இல் தொடங்கப்பட்டது.

கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முழுப் பயன் என்ன..? யாரெல்லாம் வாங்க முடியும்..? என்பதை முழுமையாகப் பார்ப்போம்.

மோடி அரசு அறிவிப்பால் விவசாயிகள் கொண்டாட்டம்..!

விவசாயிகள்

விவசாயிகள்

கடன் மற்றும் நிதியுதவியைப் பெற, விவசாயிகள் அவர்களது நிலத்தின் உரிமையை உறுதி செய்யும் ஆவணங்களுடன் வங்கிக் கிளைக்கு நேரடியாகக் கொண்டு சென்றால் மட்டுமே கடன் பெற முடியும். இத்திட்டம் மூலம் கடன் பெற இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும்.

யார் தகுதியானவர்

யார் தகுதியானவர்

1. விவசாயிகள் – தனிநபர்/கூட்டு கடன் வாங்குபவர்கள், நில உரிமையாளர் விவசாயிகள்
2. குத்தகைதாரர் விவசாயிகள், வாய்வழி குத்தகை தாரர்கள் & பங்கு பயிர் செய்பவர்கள்
3. குத்தகை விவசாயிகள், பங்கு பயிர் செய்பவர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் சுய உதவிக் குழுக்கள் (SHGs) அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGs).

கிசான் கிரெடிட் கார்டு நன்மைகள்
 

கிசான் கிரெடிட் கார்டு நன்மைகள்

· வங்கியில் இருந்து பணம் எடுக்கப் பாஸ்புக் வழங்கப்படும்.
· 25,000 ரூபாய் கடன் வரம்புடன் வழங்கப்பட்ட காசோலை புத்தகம்.
· விவசாயிகள் விதைகள், உரங்கள், விவசாய உபகரணங்கள் ஆகியவற்றைக் கடன் தொகையுடன் வாங்கலாம்.
· குறைந்த வங்கி வட்டி விகிதங்கள், சராசரியாகச் சுமார் 9% வட்டியில் கடன்
· அதிகபட்ச கடன் வரம்பு 3 லட்சம் ரூபாய்
· நல்ல கடன் மதிப்பெண்கள் உள்ள விவசாயிகளுக்கு அதிகக் கடன் வரம்பு.
· நல்ல கடன் மதிப்பெண்கள் உள்ள விவசாயிகளுக்கு வட்டி விகிதத்தில் மானியங்கள்.

 கிசான் கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது

கிசான் கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது

ஆர்வமுள்ள நபர்கள் வங்கிக்குச் சென்று தேவையான விண்ணப்பத்தை மற்ற விவரங்களுடன் பூர்த்திச் செய்ய வேண்டும். எச்டிஎஃப்சி வங்கியின் கூற்றுப்படி, “அனுமதிக்கு முன், விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோரை வங்கி சரிபார்க்கும். விண்ணப்பதாரரின் நிலம், பயிர் முறை, வருமானம் போன்றவற்றையும் வங்கி சரிபார்க்கும்.

கிசான் கிரெடிட் கார்டின் டிஜிட்டல் மயமாக்கல்

கிசான் கிரெடிட் கார்டின் டிஜிட்டல் மயமாக்கல்

கிசான் கிரெடிட் கார்டு (KCC) கடன்களை ஆரம்பம் முதல் இறுதி வரையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு பைலட் திட்டம், ரிசர்வ் வங்கியின் கண்டுபிடிப்பு மையம் (RBIH), RBI உடன் இணைந்து இந்த முயற்சியின் ஒரு பகுதியாகச் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to apply online for Kisan Credit Card?; Check benefits and features

How to apply online for Kisan Credit Card?; Check benefits and features கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி..? அதன் நன்மைகள் என்ன..?

Story first published: Wednesday, September 7, 2022, 17:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.