ஜெர்மனி பெண்ணை கரம் பிடித்த மதுரை இளைஞர்..!

சிவகங்கையில், காரைக்குடியை சேர்ந்த இளைஞரும்- பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணும் இரு தினங்களுக்கு முன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், அதேபோன்று, ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணை, மதுரை இளைஞர் தமிழ் முறைப்படி தாலிக் கட்டி திருமணம் செய்துக்கொண்டார்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காசிலிங்கம் – சூரியகலா தம்பதியின் மகன் காளிதாஸ், ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இண்டர்நெட் வாயிலாக பழக்கம் ஏற்பட்ட ஜெர்மனியை சேர்ந்த ஹாணா பொம்க்லெவா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

இருவரும் இரண்டு ஆண்டுக்கு மேல் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் ராமேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.