‘நீங்கள் ஏன் திமுகவில் இணையக் கூடாது’- மீண்டும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் ஓபிஆர்!

அதிமுகவின் ஒரே மக்களவை எம்பியான ஓ. ரவீந்திர நாத், திங்கள்கிழமை (செப்.5) திமுக அரசு அறிவித்த புதுமைப் பெண் கல்வி நிதித் திட்டத்தை பாராட்டி பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தப் பாராட்டு முன்னாள் முதலமைச்சரும், ஓ.பி.ஆர்.ரின் தந்தை ஓ.பி.எஸ்.,ஸின் முன்னாள் சகாவுமான எடப்பாடி கே பழனிசாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை நீதிமன்றம் மீட்டுக் கொடுத்த நிலையில் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ஆர்., ஆகியோர் திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், “ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தற்போதைய திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளதையும் அவர்கள் பட்டியலிட்டனர்.

அதிமுகவில் நிகழ்ந்த உள்கட்சி பிரச்னைக்கு இடையே ஜூலை 11ஆம் தேதி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆக.17ஆம் தேதி நியமனத்தை நிறுத்திவைத்து ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையை தொடர வேண்டும் என உத்தரவிட்டார்.

தற்போது உயர் நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் எனவும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தொடரலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ்., தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யயுள்ளது.

மேலும் ஓ.பி.எஸ்., ஸின் மகன் ஓ.பி.ஆர்., திமுகவை பாராட்டியதற்காக எடப்பாடி பழனிசாமி அணியினரின் கோபத்துக்கு ஆளாகுவது இது முதல் முறையல்ல. அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி.யும், ஓ.பன்னீர் செல்வத்தின் அன்பு மகனுமான ஓ. ரவீந்திர நாத் மே மாதம் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
“இது அதிமுக தலைமையகத்தில் இருந்து ஆவணங்களை திருடவும், குண்டர்களை ஏவி கழக தொண்டர்களை தாக்குவதற்கும் மாநில அரசு உதவியது” என எடப்பாடி ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பேசிய முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், “ஒற்றுமையை ஏற்படுத்த ஒ.பி.எஸ், அவரது மகன் ஓ.பி.ஆர்., வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி., தினகரன் உள்ளிட்டோர் ஏன் மு.க. ஸ்டாலினிடம் செல்லக் கூடாது.
ஓ.பி.எஸ்., -ம், அவரது மகனும் திமுகவில் இணையலாம் என நான் அறிவுறுத்துகிறேன்” என்றார். மேலும், “ஓ.பி. ரவீந்திர நாத் தனது தந்தையின் சார்பில் திமுகவுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இது போன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் என்றும் குற்றஞ்சாட்டினா்.

மேலும், “2011ஆம் ஆண்டு வறுமையில் உள்ள ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அம்மா ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பட்டதாரி அல்லாத பெண்களுக்கு பட்டதாரி பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் கிடைத்தது. இதன் மூலம் 14 லட்சம் பெண்கள் பயனடைந்தனர். இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான 7 டன் தங்கம் விநியோகிக்கப்பட்டது.

அதேபோல் புதுமை பெண் திட்டத்திலும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், பயிலும் மாணவ- மாணவியர்கள் ஏழைகள் அல்ல பணக்காரர்கள் என இந்த அரசு நினைக்கிறதா? எனவும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.