லிஸ் ட்ரஸ் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ரணில் ஜெயவர்தன என்னும் ஒரு இலங்கை வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளார்.
அவரது தந்தை 1978ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.
லிஸ் ட்ரஸ் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஒரு இலங்கை வம்சாவளியினரும் இடம்பெற்றுள்ளார்.
அவரது பெயர், ரணில் ஜெயவர்தன (Ranil Malcolm Jayawardena, 36).
ரணில், சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் பிறந்த ரணிலைக் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. ரணிலின் தந்தையாகிய நளின் ஜயவர்தன இலங்கை வம்சாவளியினர் ஆவார். ரணிலின் தாயாகிய இந்திரா ஜயவர்தனவோ இந்திய வம்சாவளியினர் ஆவார்.
நளின் ஜயவர்தன, 1978ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.
ரணிலின் மனைவியின் பெயர் Alison. தம்பதியருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
Credit: @10DowningStreet