பெங்களூரு வெள்ளத்தில் சேதமான வாகனங்கள்.. காப்பீடு பெறுவது எப்படி?

பெங்களூரு நகரில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய கனமழை பெய்ததை அடுத்து அந்நகரமே வெள்ள நீரில் தத்தளித்தது என்பது தெரிந்ததே.

பெங்களூரு நகரில் உள்ள ஐடி ஊழியர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் திணறினர் என்பதும் ஒரு சிலர் டிராக்டர் மூலம் வேலைக்கு சென்றதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பெங்களூர் நகரில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் சேதமான வாகனங்களுக்கு காப்பீடு தொகை பெறுவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

இந்தியாவில் என்ஆர்ஐ-கள் முதலீடு செய்ய சிறந்த 5 வழிகள்!

பெங்களூரு கனமழை

பெங்களூரு கனமழை

பெங்களூருவில் தொடர் மழை பெய்ததால் அந்நகரின் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்களி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மூழ்கின. கனமழை காரணமாக பெங்களூருவில் பல பகுதிகளில் கார்கள் மற்றும் பைக்குகள் நீரில் மூழ்கியதாகவும், வாகனங்கள் ஓரளவு தண்ணீருக்கு அடியில் இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்களில் காணப்பட்டது.

வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்

வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்

வெள்ளநீரில் மூழ்கிய தங்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை எவ்வாறு சரிசெய்வது என்பது குடியிருப்பாளர்களுக்கு இப்போது மற்றொரு பெரும் கவலையாக உள்ளது. உங்கள் வாகனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை எவ்வாறு காப்பாற்றுவது மற்றும் என்ன வகையான காப்பீட்டுத் தீர்வுகள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

காப்பீடு
 

காப்பீடு

கார் மற்றும் இருசக்கர வாகன இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவதற்கு முன் அதன் அம்சங்கள் மற்றும் நன்மைகளைப் புரிந்துகொள்வது அவசியம். கார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இயற்கை பேரழிவுகளால் தங்கள் கார்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதில் உரிமையாளர்களுக்கு உதவும் சில பாலிசிகளை வழங்குகின்றன.

பொதுவான வாகன காப்பீடு

பொதுவான வாகன காப்பீடு

மேலும் வெள்ளம், பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும்போது வாகனங்கள் சேதமடைந்தால் அதற்கென இருக்கும் சில பொதுவான காப்பீடுகள் வாகன உரிமையாளர்களுக்கு உதவும். விபத்து சேதங்கள், தீ அல்லது குண்டுவெடிப்பு, திருட்டு உள்பட மனிதர்களால் மற்றும் இயற்கை பேரழிவால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்கு சில காப்பீடுகள் பொருந்தும். இருப்பினும், வாகனங்களின் இன்ஜின் அல்லது கியர்பாக்ஸ் போன்ற சில சேதங்களுக்கு இந்த காப்பீடு வழங்கப்படாது.

என்ஜின் பாதுகாப்பு பாலிசி

என்ஜின் பாதுகாப்பு பாலிசி

பொதுவான காப்பீட்டில் கார் இன்ஜினுக்கான சேதங்களை ஈடுசெய்யாது என்பதால், இந்த ஆட்-ஆன் மூலம் சேதமடைந்த எஞ்சின் பாகங்களை பழுதுபார்ப்பதற்கு அல்லது மாற்றுவதற்கு உரிமையாளர்கள் இந்த பாலிசி பயனுள்ளதாக இருக்கும்.

வாகனம் சேதமடைந்தால்

வாகனம் சேதமடைந்தால்

வெள்ளத்தால் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு வாகனம் சேதமடைந்தால், காரின் விலைப்பட்டியல், கொள்முதல் விலை, பதிவுச் செலவு மற்றும் சாலை வரி போன்றவற்றை பெறும் பாலிசியும் உண்டு

பாலிசி நிறுவனங்கள்

பாலிசி நிறுவனங்கள்

வாகனங்களுக்கான பாலிசிகளை வழங்குவதில் அக்கோ, ஹெச்டிஎஃப்சி எர்கோ, ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ், டாடா ஏஐஏ, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் பல வகைகளில் பாலிசிகளை வழங்குகின்றன. இந்நிறுவனங்களில் பாலிசி எடுக்கும்போது தங்களது வாகனங்களுக்கு பொருத்தமான பாலிசிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது மற்றொரு முக்கியமான விஷயம் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vehicles Damaged In Bengaluru Flood? Check How Insurance Policy Can Cover Your Loss

Vehicles Damaged In Bengaluru Flood? Check How Insurance Policy Can Cover Your Loss | பெங்களூரு வெள்ளத்தில் சேதமான வாகனங்கள்.. காப்பீடு பெறுவது எப்படி?

Story first published: Wednesday, September 7, 2022, 17:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.