மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்னது ஒரு குற்றமா?.. ரன்பீர்-ஆலியா ஜோடிக்கான எதிர்ப்பு ஏன்?

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவி ஆலியா பட் ஆகிய இருவரையும் கோயிலுக்குள் நுழையவிடாமல் இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான, அவமானகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடி கோயிலுக்குள் செல்ல முடியாமல் திரும்பி சென்றுள்ளது. 2011-ல் அவர் சொன்ன ஒரு கருத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங் தள் அமைப்பினரை அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.
ரன்பீர் கபூர், 11 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியின் போது பேசுகையில் தனக்கு மாட்டிறைச்சி மிகவும் பிடிக்கும் என்று கூறினார். “எங்களது குடும்பம் பெஷாவரில் இருந்து வந்தது. பெஷாவர் கலாச்சாரத்தில் இருந்த பல்வேறு உணவு பழக்க வழக்கங்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டது. நான் மட்டன், பாயா மற்றும் மாட்டிறைச்சி விரும்பி சாப்பிடுபவன். ஆம், நான் மாட்டிறைச்சி விரும்பி சாப்பிடுவேன்” என்று அப்போது பேசியிருந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய இந்த வீடியோ தற்போது திடீரென சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து ரன்பீர் கபூரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தை புறக்கணிக்கும்படி இந்து அமைப்பினர் சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

image
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள மகாகாளி கோயிலுக்கு தனது கர்ப்பிணி மனைவியும் நடிகையுமான ஆலியா பட்டுடன் வருகை தந்தார் நடிகர் ரன்பீர் கபூர். அப்போது பஜ்ரங் தள் அமைப்பினர் ஆலியா, ரன்பீரை மகாகாளி கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் இந்து விரோதிகள் என்று கோஷமிட்டு கருப்புக் கொடி காட்டினர். ஜெய் ஸ்ரீராம் எனவும் முழக்கி எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு போலீசாருடன் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடிக்கு நிகழ்ந்துள்ளது மிகவும் மோசமான சம்பவம். மாட்டிறைச்சி உண்ணும் யாரும் கோயிலுக்குள் செல்லக் கூடாது என சட்டம் இருக்கிறதா?. நம்பிக்கைகள் என்ற போலியான கோஷத்தில் கீழ் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டின் மான்பிற்கு ஊருவிளைவிக்கும் வகையில் அமைந்து வருகிறது.

இதையும் படிக்க: சமூக வலைதளங்களில் முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு – கோவை அதிமுக நிர்வாகி கைது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.