வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரயில்வே நிலங்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், 35 ஆண்டுகள் வரை குத்தகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் நரேந்திரமோடி தலைமை யில் அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரயில்வே நிலங்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்ததது.

இது குறித்து, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே நிலத்தின் மதிப்பில் 1.5 சதவிகிதத்தை குத்தகை தொகையாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவதால், நாடு முழுவதும் 300 சரக்கு கையாளும் முனையங்கள் அமைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement