ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் லிஸ் ட்ரஸ் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரிட்டன் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லிஸ் ட்ரஸ் விரைவில் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவருடன் நேற்று தொலைபேசியில் பேசினார்.
ரஷ்யாவுக்கு எதிராக ஒன்றாக நிற்போம் என்று பேசிய இரு தலைவர்களும் இரு நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்துவோம் என்று உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா?
லிஸ் ட்ரஸ்
பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் ட்ரஸ்ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இந்த நிலையில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ராணியிடம் ஆசி
இந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களை சந்தித்து ஆசி பெற்ற லிஸ் ட்ரஸ் இன்னும் ஒரு சில நாட்களில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்று கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோபைடனுடன் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவர்களுடன் நேற்று தொலைபேசியில் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் லிஸ் ட்ரஸ் அவர்கள் ரஷ்யாவுக்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பரஸ்பரம் உறுதியளித்தனர்.
சீனாவுக்கு எதிரான நடவடிக்கை
மேலும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது, ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பல்வேறு விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது போர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் லிஸ் ட்ரஸ், அமெரிக்காவுடன் இணைந்து, ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க உறுதிமொழி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Joe Biden, Liz Truss commit to stand up against Russia, economic woes
Joe Biden, Liz Truss commit to stand up against Russia, economic woes | ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை.. ஜோ பைடனிடம் லிஸ் ட்ரஸ் முக்கிய பேச்சுவார்த்தை!