சென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜெக்டான பொன்னியின் செல்வன் படம் பல்வேறு சமயங்களில் பலரது கனவாக இருந்துள்ளது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரது கனவுப்படமான இந்தப்படத்தை முன்னதாக மணிரத்னமே இரண்டு முறை முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படம் தற்போது திரை வடிவம் பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் படம்
பொன்னியின் செல்வன் படம் பலரது கனவு ப்ராஜெக்ட்டாக சினிமாவில் இருந்துள்ளது. எம்ஜிஆர் இந்தப் படத்திற்கு திரைவடிவம் கொடுக்க முன்னதாக முயற்சி செய்தார். ஆனார் அவரது முயற்சி கனவாகவே இருந்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் உரிமையை அவரிடம் இருந்து கமல்ஹாசன் பெற்றார்.
கமலின் முயற்சி
இந்தப் படத்தைத் திரைக்காவியமாக்க 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் முயற்சி எடுத்தார். அப்போது அவர் சொந்த தயாரிப்பாக இந்தப் படத்தை எடுக்க 2 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டது. தற்போது இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து எடுத்துள்ள நிலையில் பட்ஜெட் பல கோடிகளை தாண்டியுள்ளது.

150 நாட்களில் சூட்டிங்
இந்தப் படத்தை முன்னதாக மணிரத்னமே இரண்டு முறை முயற்சித்தார். அந்த திட்டத்தில் மகேஷ்பாபு, விஜய் எல்லாம் இருந்தார்கள். ஆனால் தற்போது மூன்றாவது முறை தனது கனவு ப்ராஜெட்டை சாத்தியப்படுத்தியுள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தினை அவர் 150 நாட்களில் எடுத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 30ல் ரிலீஸ்
ஆனால் படத்தின் சிஜி வொர்க் உள்ளிட்டவற்றிற்காக இத்தனை காலங்கள் ரிலீசுக்கு ஆகியுள்ளது. படத்தின் முதல் பாகம் தற்போது வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது. விரைவில் இரண்டாவது பாகமும் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு கேரக்டரும் அதற்கான சரியான அளவுகோல்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான இசை வெளியீடு
படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் என முன்னதாக மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் பிரம்மாண்டம் இருக்கும்படி லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தொடர்ந்து பார்த்துக் கொள்கிறது. இந்நிலையில் நேற்றைய இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.

மேடையில் இணைந்த ஜாம்பவான்கள்
இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யங்கள் நடந்தன. திரையுலகின் இரண்டு ஜாம்பவான்கள் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு ஒரே மேடையில் பேசியது மிகவும் சிறப்பான அம்சமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரையும் தனித்தனியாக இயக்கிய மணிரத்னமும் ஒரு கட்டத்தில் இவர்களுடன் ஒரே மேடையில் தோன்றினார்.

ஜாம்பவான்களை க்ளிக்கிய ஜாம்பவான்
மிகவும் அரிய நிகழ்வான இந்த காட்சியை ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தனர். பிரபலங்களும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த அரிய காட்சியை தன்னுடைய செல்போனில் க்ளிக்கிக் கொண்டார். லெஜண்ட்களை க்ளிக்கிய லெஜண்டை மற்றவர்கள் தங்களது செல்போனில் தனித்தனியாக பதிவு செய்துக் கொண்டனர்.