கணவனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த ஜஹ்ரா எஸ்மாயிலி என்பவருக்கு மரண தண்டனை
நேரிடையாக 16 தூக்குத்தண்டனையை காண நேர்ந்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானில் மாரடைப்பால் இறக்கும் தருவாயில் இருந்த பெண்ணை அவரால் பாதிக்கப்பட்டவரின் தாயாரே தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றிய கொடூரம் நிகழ்ந்துள்ளது.
ஈரானில் கடந்த 2017ல் தம்மை மிகக் கொடூரமான நடத்தி வந்த கணவனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த ஜஹ்ரா எஸ்மாயிலி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
@iranHRM
தூக்கிலிடப்படும் நாள் அன்று அவர் நேரிடையாக 16 தூக்குத்தண்டனையை காண நேர்ந்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவரது அந்த பரிதாப நிலையையும் பொருட்படுத்தாமல், அவரை தூக்கிலேற்றியுள்ளனர்.
மட்டுமின்றி, அவரது சடலமானது குறிப்பிட்ட நிமிடங்கள் வரையில் தூக்கில் தொங்க வேண்டும் எனவும், தண்டனையை நிறைவேற்றும் முன், ஜஹ்ரா எஸ்மாயிலி நின்றிருந்த நாற்காலியை எட்டி உதைக்கும் பணியை அவரது கணவரின் தாயாருக்கு வழங்கப்பட்டிருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty
இந்த கொடூர நடவடிக்கைகள் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை என தெரிய வந்துள்ள நிலையில், ஜஹ்ரா எஸ்மாயிலியின் சட்டத்தரணியே நடந்த சம்பவங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும், ஜஹ்ரா எஸ்மாயிலியின் மரணம் தூக்கிலிடப்பட்டதால் அல்ல எனவும் அவர் மாரடைப்பால் இறந்தார் எனவும் அந்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
@getty
ஜஹ்ரா எஸ்மாயிலி மட்டுமின்றி, தந்தையை கொல்ல துணையிருந்ததாக கூறி ஜஹ்ரா எஸ்மாயிலியின் மகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மட்டுமின்றி, ஜஹ்ரா எஸ்மாயிலியின் மகனும் கைது செய்யப்பட்டார்.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் இனிமேலும் தொடரக்கூடாது என்பதால் பொதுமக்கள் முன்னிலையில் ஜஹ்ரா எஸ்மாயிலி தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.