இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் அவரது நாட்களில், முதல் தர போட்டிகளுக்கு 150 – 200 ரூபாய் வரையில் பெற்றுள்ளதாக மூத்த விளையாட்டு பத்திரிக்கையாளார் அயாஸ் மேமன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் எப்போதுமே இந்தியாவில் பிரபலமான ஒரு விளையாட்டாக இருந்து வருகின்றது.
ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளை காட்டிலும் வீரர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கோடீஸ்வரர்களின் வீடுகளையும் பதம் பார்த்த வெள்ளம்.. படகில் மீட்கப்பட்ட தொழிலதிபர்கள்!

கிரிக்கெட் வீரர்களுக்கு பல சலுகைகள்
ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டு வீரர்கள் அனுபவித்து வரும் சலுகைகளை போல் அல்லாமல, கிரிக்கெட் வீரர்களுக்கு பல சலுகைகள் உள்ளன. எனினும் 4 வீரர்கள் ஒரே அறையில் வசிப்பதையும், அவர்களின் துணிகளையும் துவைக்க வேண்டியிருந்ததையும் பார்த்துள்ளதாக மேமன் தெரிவித்துள்ளார்.

தினசரி அலவன்ஸ்
அதே நேரம் அவர்களுக்கு தினசரி 10 டாலர்கள் அலவன்ஸ் கிடைக்கும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இருப்பினும் அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது சூழ்நிலைகள் மாறிவிட்டன.
கிரிக்கெட் மட்டும் அல்ல இன்று மற்ற விளையாட்டுகளுமே பிரபலமாகியுள்ளது. பற்பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அலவன்ஸை அதிகரிக்க கோரிக்கை
இது குறித்து வெங்சர்க்கார் கூறுகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அதிக உதவித்தொகை பெறவில்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு அலவன்ஸை அதிகரிக்குமாறு கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
தான் மேற்கிந்திய தீவுகள் சுற்று பயணத்திற்கு பிறகு, அமெரிக்காவில் சில கண்காட்சிக்கு போட்டிகளில் விளையாடியதற்காக போர்டு 50,000 ரூபாய் அபராதம் விதித்த நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.

அடமானம்
அப்போது அவர் கடனுக்காக விண்ணப்பித்தது குறித்தும், கிரிக்கெட் வாரியத்திற்கு பணம் செலுத்துவதற்காக தனது வீட்டினை அடமானம் வைத்து குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
Do you know the salary of cricketers in 80s – 90s?
Do you know the salary of cricketers in 80s – 90s?/80 – 90களில் கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?