ஆடை விவகாரம் : சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா

பாலிவுட் என்றாலே கிளாமருக்கும், கவர்ச்சிக்கும் குறையிருக்காது. எங்கு வெளியில் சென்றாலும் பாலிவுட் நடிகைகளின் பின்னால் 'பப்பராசி' புகைப்படக் கலைஞர்கள் செல்வார்கள். நடிகைகளிடம் விதவிதமாக போஸ் கொடுக்கச் சொல்லி புகைப்படங்களை எடுப்பார்கள். அந்த புகைப்படங்களை ரசிப்பதற்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அதே சமயம் எந்த இடத்தில் எந்த ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்பதில் பாலிவுட் ரசிகர்கள் சரியாக விமர்சனம் வைப்பார்கள். ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமாகும் 'குட்பை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவுக்காக 'லெஹங்கா' ஆடை ஒன்றை அணிந்து சென்றார் ராஷ்மிகா. மேலாடை பகுதியில் பிகினி போன்ற வடிவமைப்பில் ஆடையும், அதற்கு மேல் மூடப்படாத கோட் ஒன்றையும் அணிந்திருந்தார். மிகவும் கிளாமராக இருந்த அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

அதே சமயம் அதே ஆடையுடன் மேலாடை பக்கம் 'கோட்' ஐ மூடிய படி மும்பையின் பிரபலமான 'லால்பகுச்சா ராஜா' விநாயகர் சிலையை வழிபடச் சென்றிருந்தார். கடவுளை வழிபட அப்படி ஒரு ஆடையில் அவர் செல்லலாமா என்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், விநாயகர் சிலை முன்பு நின்று கொண்டு அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது தவறு என்றும் அவ்வளவு கூட்டத்திற்கிடையில் ராஷ்மிகா சென்றதால் பாலியல் தொந்தரவு நடக்கவும் வாய்ப்புகள் உண்டு என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.