சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட நடிகைகள் கேரளா சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி புதிய புகைப்படங்களை வெளியிட்டனர்.
எங்கடா நம்ம கீர்த்தி சுரேஷ் போன வருஷம் போல இந்த வருஷமும் குடும்பத்தோட ஓணம் கொண்டாடும் போட்டோக்களை போடலையேன்னு பார்த்தா…
உதயநிதி ஸ்டாலின் உடன் ஓணம் கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ப்பா எவ்ளோ அழகு
கேரளா சேலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்ளோ அழகாக கோலம் போடுவது என்ன, தலையில் மல்லிகைப் பூ வைத்திருப்பதை திரும்பிக் காட்டி போஸ் கொடுப்பது என ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளார். ஆனால், இந்த முறை அவர் யாருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினார் என்பது தான் ஹைலைட்டே..

உதயநிதியுடன் ஓணம் கொண்டாட்டம்
நடிகை கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலின் உடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். கடந்த ஆண்டு தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவும்
உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி கீர்த்தி சுரேஷின் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையில் நடிகர் வடிவேலுவும் கலந்து கொண்டது ரசிகர்களை மேலும், ஆச்சர்யத்தில் அப்படி எங்க தான்ப்பா ஓணம் பண்டிகையை கீர்த்தி சுரேஷ் கொண்டாடினார் என பார்த்தால், அடுத்தடுத்து அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே அது தெளிவாக தெரிந்து விட்டது.

மாமன்னன் குழுவுடன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் இந்த ஆண்டு குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லையே என ஃபீல் செய்தவர் தற்போது மாமன்னன் படக்குழுவினருடனே கோலாகலமாக ஓணம் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடி உள்ளார்.

செம சாப்பாடு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் விருந்தையும் தனது மாமன்னன் டீமுடன் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படத்தையும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களுக்காக காரில் செல்லும் போது ஓணம் பாடலையும் அவர் பாடி சந்தோஷப்படுத்தி உள்ளார்.

ஏகப்பட்ட படங்கள்
மீண்டும் தனது இடத்தை பிடித்து விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தமிழில் மாமன்னன், தெலுங்கில் தசரா, போலா சங்கர் என பல படங்கள் உள்ளன. மேலும், தளபதி 67 படத்திலும் இவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.