கொஞ்சம் மசாலா போதும்! 5 நிமிடத்தில் ஸ்பைசி முட்டை ரோஸ்ட் இப்படி பண்ணுங்க

உலகம் முழுவதும் முட்டை மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. இது பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

முட்டையால் செய்யப்பட்ட உணவைத் தயாரிக்க 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும், இது துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளது, அனைத்து புரதங்களிலும் மிக முக்கியமானது. இந்த புரோட்டீன் நிறைந்த உணவு உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும்.

இங்கு சுவையான முட்டை மசாலா அல்லது முட்டை ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வது என்பதை பாருங்கள்

தேவையான பொருட்கள்

முட்டை – 5

பூண்டு – 7

கறிவேப்பிலை – சிறிதளவு

மல்லிதூள் – 2 ஸ்பூன்

மிளகாய் தூள்- ½ ஸ்பூன்

கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்

மிளகு தூள்- ¾ ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய்-5 ஸ்பூன்

எப்படி சமைப்பது?

முட்டையை வேக வைத்து ஓடு நீக்கி, பாதியாக வெட்டவும்.

கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு, தோல் நீக்காத பூண்டுகளை லேசாக இடித்து, எண்ணெயில் சேர்க்கவும். பூண்டு நன்றாக பொரிந்ததும், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

இப்போது கொஞ்சம் மசாலா சேர்த்து, உடனே முட்டை துண்டுகளை சேர்க்கவும்.

பின் மேலே சிறிதளவு மசாலா தூவி, 1 ஸ்பூன் எண்ணெய் சுற்றி ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து, முட்டையில் ஓரளவு மசாலா பிடித்ததும் திருப்பி போட வேண்டும்.

மறுபடியும் கொஞ்சம் மசாலா, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து மசாலா முட்டையுடன் நன்கு சேர்ந்ததும் இறக்கவும்.

காரசாரமான முட்டை ரோஸ்ட் ரெடி. இது சாதம், டிஃபன் என எல்லா வகையான உணவுக்கும் சரியான சைட்டீஷ் ஆக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.