சென்னை : இயக்குநர் அட்லி விஜய், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
தன்னுடைய முதல் படத்திலேயே ஆர்யாவின் ராஜா ராணி படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கியவர்.
தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்த அவர் மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் அட்லி
இயக்குநர் அட்லி கோலிவுட்டின் சூப்பர் இயக்குநராக அறியப்படுகிறார். அடுத்தடுத்து 4 ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆர்யா -நயன்தாராவை வைத்து தன்னுடைய முதல் படமான ராஜா ராணியை வெற்றிப்படமாக கொடுத்துள்ளார். முந்தைய படங்களின் சாயல் இந்தப் படத்தில் தென்பட்டாலும் சிறப்பான திரைக்கதையால் இந்தப் படத்தை சிறப்பாக கொடுத்திருந்தார்.

விஜய்யுடன் வெற்றிக் கூட்டணி
இவரது வெற்றிக் கூட்டணி அடுத்ததாக விஜய்யுடன் துவங்கியது. விஜய்யுடன் அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததன்மூலம் இந்திய அளவில் மிகசிறந்த பெயரையும் வரவேற்பையும் பெற்றுள்ளார் அட்லி. விஜய்யுடன் அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மாஸ் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஹாட்ரிக் வெற்றி
இந்த மூன்று படங்களுமே வித்தியாசமான விஜய்யின் நடிப்பால் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றன. வசூலிலும் மிரட்டின. இந்தப் படங்களை விஜய்யின் எவர்கிரீன் ஹிட் லிஸ்ட்டில் ரசிகர்கள் சேர்த்துள்ளனர். குறிப்பாக பெண்களின் புட்பால் போட்டியை மையமாக வைத்து வெளியான பிகில் படத்தின் கதை அனைவரையும் கவர்ந்தது.

ஷாருக்கை இயக்கும் அட்லி
இந்தப் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பாலிவுட் பக்கம் தனது முத்திரையை பதிக்க களமிறங்கியுள்ளார் அட்லி. எடுத்த எடுப்பிலேயே ஷாருக்கானுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஷாருக் இரட்டை வேடங்களில் நடித்துவரும் ஜவான் படத்தினை இவர் தற்போது இயக்கி வருகிறார்.

இறுதிக்கட்டத்தை எட்டிய ஜவான்
இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் மூலம் அட்லியின் பேவரிட் நாயகியான நயன்தாரா பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அடுத்த ஆண்டு சம்மர் விடுமுறையையொட்டி இந்தப்படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடந்துள்ளது.

அட்லியின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
படத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற சூட்டிங்கில் இவர்ளின் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் அட்லியின் புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.