ஜார்க்கண்டில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரரும், எம்.எல்.ஏ-வுமான பசந்த் சோரனின் சர்ச்சைக்குரிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எம்.எல்.ஏ பசந்த் சோரன் டெல்லியிலிருந்து திரும்பியபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது டெல்லி சென்றதற்கான காரணத்தை செய்தியாளர்கள் கேட்டபோது, அவர், “உள்ளாடை தீர்ந்து விட்டது. அதனால் அவற்றை வாங்குவதற்காக நான் டெல்லிக்குச் சென்றேன். அங்கிருந்துதான் அவற்றை வாங்குகிறேன்” என்று கூறி சிரித்தார். மேலும், “நமது மாநிலத்தின் அரசியலில் அமைதியற்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது நிலைமை சீராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
Meet Basant Soren, brother of Hemant Soren and Dumka MLA where two back to back murders took place
— Rishi Bagree (@rishibagree) September 8, 2022
பசந்த் சோரனின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். கோடாவின் பா.ஜ.க எம்.பி-யும், பா.ஜ.க-வின் முக்கிய முகமுமான நிஷிகாந்த் துபே, “ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) எம்.எல்.ஏ-வும், ஏழைகள் மற்றும் பழங்குடியினரின் தலைவரான ஷிபு சோரனின் மகனான பசந்த் சோரன் உள்ளாடைகளை வாங்க டெல்லி செல்கிறார்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.