திமுக செக்; பீதியில் உறைந்த எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தில் உள்ளது. கட்சியின் தலைமை பதவி யாருக்கு? என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரிடையே கடும் போட்டி நிலவுவதால் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

கீழமை நீதிம்ன்றத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக என மாறுபட்ட தீர்ப்பு வெளியானதில் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த சூழலில் அதிமுக விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும் கேவியட் மனு தாக்கல் செய்து எதையும் சந்திக்க தயார் என்பது போல் வேட்டியை மடித்துக்கொண்டு இருக்கிறார்.

வரும் 2022ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டு சசிகலா, டிடிவி, எடப்பாடி பழனிச்சாமி,

என நான்கு துண்டுகளாக சிதறி கிடப்பது கூட்டணி கட்சியான பாஜகவுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே தேர்தலுக்கு முன்பாக அதிமுக பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டால் தொகுதி பங்கீடு, பிரச்சார வியூகங்கள் குறித்து திட்டமிடுதலை துவக்கலாம் என பாஜக கருதுகிறது.

இதன் தொடர்ச்சியாக அதிமுகவில் பிரச்சனைக்கு உரிய ஒரே நபராக கருதப்படுகிற எடப்பாடி பழனிச்சாமியை சம்மதிக்க செய்து கட்சியை ஒருங்கிணைக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டும் எந்த பலனும் ஏற்படவில்லை.

இந்த சூழலில் தான் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 3 பேருக்கு ஒரே நேரத்தில் செக் வைக்க

தலைமை முடிவெடுத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தலைமையில் வலுவான அணி அமைந்துவிட கூடாது என்பதில் தெளிவாக உள்ள திமுக தற்போது பிரிந்து கிடக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகிய 3 பேரும் இணையாத வகையில் தடுக்க, அதிரடி வியூகம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதை கனக்கச்சிதமாக செயல்படுத்தும் விதமாக 3 பேர் மீதும் சட்ட ரீதியாக தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து,‘செக்’ வைக்கும் முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதோடு அடுத்து வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்று திமுக பக்கா ப்ளான் போடுகிறது.

அதன்படி கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா என, ஒரே நேரத்தில் 3 பேருக்கும் செக் வைக்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.