நிர்மலா சீதாராமன் : பெட்ரோல் விலை குறைக்காத மாநிலத்தில் தான் பணவீக்கம் அதிகம்.. தமிழ்நாடு மாஸ்!

சில மாநிலங்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

எரிபொருள் வரியை குறைக்காத மாநிலங்களில் தான் தேசிய சராசரி அளவை விடவும் அதிகமாகப் பணவீக்க அளவீட்டை பதிவு செய்து வருகிறது, விலை உயர்வு விவகாரங்களைக் கையாளுவதில் மத்திய-மாநில ஒத்துழைப்பு அவசியம் என வியாழக்கிழமை தெரிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

உலகளாவிய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் நுகர்வோருக்கான பெட்ரோல் மீதான வரிகளை மத்திய அரசு இரண்டு முறை குறைத்திருந்தாலும், பல மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான நிவாரணமும் வழங்கவில்லை இதனால் தத்தம் மாநிலத்தில் இருக்கும் மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறினார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

பொதுக் களத்தில் பரவலாகக் கிடைக்கும் தகவல்களைப் பார்த்தால் மாநிலத்திற்கு மாநிலம் பணவீக்கம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைக் காட்டுகிறது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், தற்செயலாக நான் கவனமாகப் பேசுகிறேன் தற்செயலாக, எரிபொருள் விலையைக் குறைக்காத மாநிலங்களில் தேசிய சராசரி பணவீக்கத்தை விட இந்த மாநிலத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்று சீதாராமன் கூறினார்.

மொத்த பணவீக்கம் சராசரி அளவு
 

மொத்த பணவீக்கம் சராசரி அளவு

ஜனவரி 2022 முதல் மொத்த பணவீக்கம் சராசரியாக 6.8% ஆக இருந்தாலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் உட்பட 14 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் தேசிய பணவீக்கத்தை விட அதிகமாக உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சராசரியாக 7% க்கும் அதிகமாக உள்ளன.

முக்கிய மாநிலம்

முக்கிய மாநிலம்

தெலுங்கானா (8.32%), மேற்கு வங்கம் (8.06%) மற்றும் சிக்கிம் 8 சதவீதம் இந்த 3 மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகமான பணவீக்கத்துடன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா (7.7%), மத்திய பிரதேசம் (7.52%), அஸ்ஸாம் (7.37%). ), உத்தரப் பிரதேசம் (7.27%), குஜராத் மற்றும் ஜே&கே ஆகிய இரண்டும் சராசரியாக 7.2 சதவீதமாக உள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

பணவீக்கத்தை மத்திய அரசால் மட்டுமே கையாள முடியாது, மாநிலங்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்காத போது, இந்தியாவின் ஒரு பகுதி பணவீக்கத்தின் அழுத்தத்திலிருந்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்கள் எப்படி அவர்களின் பணவீக்கத்தைக் கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வதற்குப் போதுமான தரவுகளும், வழிகளும் உள்ளன என்று சீதாராமன் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் தரவுகள்

தமிழ்நாட்டின் தரவுகள்

அரசு தரவுகள் படி ஜூன் 2022ல் இந்தியாவின் பணவீக்கம் 7.01 சதவீதமாக இருந்த போது தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.08 சதவீதமாக இருந்தது.

இதேபோல் ஜூலை 2022ல் இந்தியாவின் பணவீக்கம் 6.71 சதவீதமாக இருந்த போது தமிழ்நாட்டின் பணவீக்கம் 4.78 சதவீதமாக இருந்தது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

States which haven’t cut fuel taxes are facing higher inflation says Nirmala Sitharaman, but Tamilnadu

States which haven’t cut fuel taxes are facing higher inflation says Nirmala Sitharaman, but Tamilnadu is off the track with solid ground for economic growth.

Story first published: Thursday, September 8, 2022, 19:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.