பழனியப்பனுக்கு 'நோ' பவர்.. கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்- பின்னணி என்ன?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தனது பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் தான் தேர்தல் வர வாய்ப்புள்ளது என்றாலும் கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சார வியூகம் என அரசியல் கட்சிகள் தங்களது பணியை தொடங்கிவிட்டன.

குறிப்பாக ஆளுங்கட்சியான

எப்படியாவது 39 தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்து வருவதாக உடன் பிறப்புகள் கூறுகின்றன. அதன் வெளிபாடே முதலமைச்சர்

பம்பரமாக சுழன்று வருகிறார் என்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் கூட அலுவல் மற்றும் கட்சிப் பணியை செய்து வருகிறார் என்றும் மார்த்தட்டி வருகின்றனர் திமுகவினர்.

தமிழகத்தில் திமுக வாக்கு வங்கி பலவீனமாக உள்ள மாவட்டங்களில் உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெற வைப்பது உங்கள் வேலை என பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தெரிகிறது. அதன் வெளிபாடே கோவையில் கடந்த மாதம் செந்தில் பாலாஜி நிகழ்த்திய அற்புதம், முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட 55,000 பேரை கட்சியில் இணைத்து அதிமுகவுக்கு அவர் அதிர்ச்சி கொடுத்தார்.

கழிவறையை சுத்தம் செய்த MLA

அதேபோல் மேற்கு மண்டலத்தில் பலவீனமாக உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வலுப்படுத்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காந்தி ஆகியோருக்கு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் முகாமிட்டுள்ள அமைச்சர் பன்னீர்செல்வம் அரசின் நலத்திட்ட பணிகள் உட்கட்சி தேர்தல் ஆகியவற்றை மும்முரமாக கவனித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்தாண்டு திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் எப்படியாவது மாவட்ட செயலாளர் பதவியை பெற தலைமையிடம் போராடி வருவதாக கூறப்படுகிறது. அதனால், பழனியப்பனுக்கு உள்ளூரில் (தருமபுரியில்) உள்ள செல்வாக்கு குறித்து திமுக ஐடி விங் ஆய்வு செய்ததாக தெரிகிறது. அதில் தலைமைக்கு திருப்தியான அறிக்கை கிடைக்கவில்லையாம்.

இந்த தகவல் மாஜி அமைச்சருக்கு எட்டவே கணிசமான தொகையோடு சிலரை அணுகியதாகவும் அவர்கள் தலைமை முடிவை மாற்ற தங்களால் முடியாது என கையை விரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அண்ணா அறிவாலய வட்டாரத்தில் விசாரித்த போது, பழனியப்பனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கலாமா என்று மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தபோது அவரை காட்டிலும் கட்சிக்காக உழைத்த நபர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கினால் நன்றாக இருக்கும் என்ற கருத்தே மேலோங்கியதாக தெரிகிறது. அதனால், திமுக எதிர்கட்சியாக இருந்த போது உழைத்த நபர்களில் யாரேனும் ஒருவருக்கு பொறுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்று கூறுகின்றனர்.

அதேநேரத்தில் தருமபுரி மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதனால் கொங்கு சமூகத்தை சேர்ந்த பழனியப்பன் பொறுப்புக்கு வர அவர் விரும்பவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.