சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் நடிகை த்ரிஷா.
நேற்றைய தினம் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சிறப்பான கெட்டப்புடன் கலந்து கொண்ட த்ரிஷா, அனைவரையும் கவர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் சித்தார்த்தும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
பொன்னியின் செல்வன் படம்
மணிரத்னம் இயக்கத்தில் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏற்கனவே அதிகமான விளம்பரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. முன்னதாக படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியீட்டிலேயே தன்னுடைய பிரம்மாண்டத்தை லைகா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் காட்டியுள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சம்
இந்நிலையில் நேற்றைய தினம் பிரம்மாண்டத்தின் உச்சமாக பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமில்லாமல் திரைத்துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். ஏராளமான கல்லூரி மாணவர், மாணவிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

த்ரிஷாவின் குந்தவை கேரக்டர்
இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷாவும் அழகான கெட்டப்புடன் கலந்துக் கொண்டார். படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தப்படியாக அவரது கேரக்டர் மிகவும் முக்கியமானது என்பதால், கேமரா கண்கள் அனைத்தும் அவரை அதிகமாகவே ஃபோகஸ் செய்தன.

அழகான த்ரிஷா
அதற்கு ஏற்ப நேற்றைய நிகழ்ச்சியின் தனது கேரக்டருக்கு நியாயம் செய்யும் வகையில் மிகவும் அழகான காஸ்ட்யூமில் கலந்துக் கொண்டு அனைவரையும் கவர்ந்தார் த்ரிஷா. நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்து, அனைத்து விஷயங்களையும் மிகுந்த உற்சாகத்துடன் கண்டு களித்தார்.

யாக்கை திரி பாட்டிற்கு ஆட்டம்
பாடல்களின்போதும் இவரது உற்சாகம் மிக அதீததாக காணப்பட்டது. குறிப்பாக யாக்கைத் திரி என்ற ஆயுத எழுத்து படத்தின் பாடலுக்கு இவரது உற்சாகம் கரைபுரண்டோடியது. உட்கார்ந்த இடத்திலேயே துள்ளலாக நடனமாடினார். இதில் ஹைலைட் என்னவென்றால் அந்தப் படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடித்திருந்த நடிகர் சித்தார்த்தும் த்ரிஷாவுடன் இணைந்துக் கொண்டார்.

ஆயுத எழுத்து ஜோடி
இவர்களின் இந்த உற்சாக நடத்தை கேமராக்கள் அதிகமாக படம் பிடித்தன. ஸ்டேஜில் யாக்கைத் திரி பாடலை தன்னுடைய இசையால் சிறப்பாக்கியிருந்தார் ஏஆர் ரஹ்மான். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்துப் படத்தில் மூன்று ஜோடிகள் நடித்திருந்த நிலையில், சித்தார்த் மற்றும் த்ரிஷாவும் அதில் ஒரு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.