ரெடியா இருங்க.. பிளிப்கார்ட், அமேசான் கொடுக்கப்போகும் ஜாக்பாட்..!

அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈகாமர்ஸ் நிறுவனங்கள் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் நடக்கவிருக்கும் பண்டிகை கால விற்பனைக்கு மிகப்பெரிய அளவில் தயாராகுமாறு தங்கள் விற்பனையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதாரம் மறுமலர்ச்சியில் இருக்கும் நிலையில் தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு முழு அளவிலான பண்டிகை மற்றும் திருமணச் சீசனுக்கான சிறந்த வர்த்தகச் சூழ்நிலை இந்தப் பண்டிகை காலத்தில் துவங்குகிறது.

இதேபோல் கொரோனாவுக்குப் பின்பு ரிடைல் கடைகள் அனைத்தும் இந்தப் பண்டிகை காலத்தில் திறக்கப்பட உள்ளது, இதேபோல் பெரிய ஈகாரமஸ் நிறுவனங்களும் போதுமான நிதி ஆதரவுகள் உடன் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!

30-40% அதிக விற்பனை

30-40% அதிக விற்பனை

முன்னணி பிராண்டுகள், விற்பனையாளர்கள் மற்றும் ஈகாமர்ஸ் நிர்வாகிகள் இந்த வருடம் நுகர்வோர் உணர்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், இதன் விளைவாகக் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுத் தீபாவளி விற்பனையின் போது 30-40% அதிக விற்பனை கிடைக்கும் எனக் கணித்துள்ளனர்.

பிளிப்கார்ட் - அமேசான்

பிளிப்கார்ட் – அமேசான்

இந்த நிலையில் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் தனது பிக் பில்லியன் டேஸ் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி துவங்க உள்ளது. அமேசான் நிறுவனமும் கிட்டதட்ட இதே தேதிகளில் தான் நடத்த உள்ளது.

செப்டம்பர் 10
 

செப்டம்பர் 10

ஆனால் பிளிப்கார்ட் இந்த ஆண்டு “early Big Billion Days sale” என்ற பெயரில் முன்கூட்டிய தள்ளுபடி விற்பனையைச் செப்டம்பர் 10 தேதி துவங்க உள்ளதாகத் தெரிகிறது. இந்த வருடம் அமேசான் பிளிப்கார்ட் மத்தியில் கடந்த ஆண்டை காட்டிலும் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9.3 பில்லியன் டாலர் வர்த்தகம்

9.3 பில்லியன் டாலர் வர்த்தகம்

2021ஆம் ஆண்டில் பண்டிகை கால விற்பனையில் சுமார் 9.3 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பதிவு செய்தது, இது 2020 வர்த்தகத்தைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமானது. இந்த வருடம் செப்டம்பர் 23 முதல் பண்டிகை கால வர்த்தகம் சூடுபிடிக்கும்.

போட்டி

போட்டி

2021 மொத்த விற்பனையில் பிளிப்கார்ட் சுமார் 62 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது, ஆனால் அமேசான் 27 சதவீத வர்த்தகத்தைப் பெற்று இருந்தது. இந்த வருடம் மீஷோ, டாடா டிஜிட்டல், ரிலையன்ஸ் ஈகாமர்ஸ் ஆகியவையும் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தள்ளுபடி

தள்ளுபடி

இந்தப் பண்டிகை காலத்தின் வர்த்தகம் தான் அடுத்த சில வருடத்தின் வர்த்தக வளர்ச்சியை உறுதி செய்யும் என்பதால் பிளிப்கார்ட், அமேசான் சக போட்டி நிறுவனங்களை விடவும் அதிகப்படியான தள்ளுபடியை அளிக்கத் திட்டமிட்டு உள்ளது.

ஆஃபர்கள்

ஆஃபர்கள்

இதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் இந்த ஆண்டு அமேசான் நிறுவனத்தை மொத்தமாக ஓரம்கட்ட சூப்பர் காயின், Buy now pay later, லைவ் காமர்ஸ் எனப் பல வகையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், தக்க வைக்கவும் முயற்சி செய்கிறது.

ஜாக்பாட்

ஜாக்பாட்

இதனால் ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் பிளிப்கார்ட், அமேசான் மத்தியிலான போட்டியில் குறைவான விலையில் இந்தத் தீபாவளிக்குப் பொருட்களை வாங்கிக் குவிக்க முடியும், ஆனால் ஆதிகமாகப் பொருட்களை வாங்கிக் கடனிலும், பணப் பிரச்சனையிலும் சிக்கிக்கொள்ளாதீர்.

வேண்டியதை முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு முறைக்கப் பல முறை விலையைச் செக் செய்து பொருட்களை ஆர்டர் செய்யுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Amazon and Flipkart set for diwali sales battle; Sellers are ready for big festive sale

Amazon and Flipkart set for diwali sales battle; Sellers are ready for big festive sale

Story first published: Thursday, September 8, 2022, 20:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.