60 நாளில் 2வது முறையாக வட்டி உயர்வு.. மக்கள் ஷாக்..!

ஐரோப்பிய மத்திய வங்கி அதன் பென்ச்மார்க் வட்டி விகிதங்களை வியாழன் அன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் 75 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியுள்ளது

மேலும் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது. மேலும் ஐரோப்பிய சந்தையின் பொருளாதாரம் குளிர்காலத்தில் மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், அதன் முக்கிய வட்டி விகித உயர்வு வியாழன் அன்று உயர்த்தியது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இனி ஒவ்வொரு காரிலும் இது கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு!

ஐரோப்பிய மத்திய வங்கி

ஐரோப்பிய மத்திய வங்கி

ஐரோப்பிய மத்திய வங்கி ஜூலை மாதம் 11 ஆண்டுகளில் எவ்விதமான வட்டியை அதிகரிக்காத நிலையில், பிப்ரவரி மாதம் துவங்கிய ரஷ்ய – உக்ரைன் போருக்கு பின்பு சில மாதங்களில் ஏற்பட்டு உள்ள வர்த்தகம் பாதிப்பு, விலைவாசி உயர்வு மூலம் ஏற்பட்ட பணவீக்கத்தின் உயர்வு காரணமாக பென்ச்மார்க் வட்டியை முதல் முறையாக ஜூலை மாதம் உயர்த்தியது.

எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை

எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை

ஐரோப்பிய நாடுகள் தற்போது எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 2வது முறையாகக் கடந்த 3 மாதத்தில் வட்டியை உயர்த்தியுள்ளது. இந்திய, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைத் தொடர்ந்து ஐரோப்பாவும் தனது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

 பென்ச்மார்க் வட்டி
 

பென்ச்மார்க் வட்டி

ஐரோப்பிய மத்திய வங்கி அதன் பென்ச்மார்க் வட்டியை ஜூலை மாதம் 0.5 சதவீதம் அதிகரித்து 0.0 சதவீதமாக அறிவித்தது. தற்போது 0.75 சதவீதம் அதிகரித்துள்ளதால் பென்ச்மார்க் வட்டி 0.75 சதவீதமாக உள்ளது.

கொள்கை வகுப்பாளர்கள்

கொள்கை வகுப்பாளர்கள்

ஐரோப்பிய நாடுகளின் பணவீக்கம் அரை நூற்றாண்டு உயர்வில் உள்ளதால் கொள்கை வகுப்பாளர்கள் விரைவான விலைவாசி உயர்வு ஐரோப்பிய குடும்பங்களின் சேமிப்பை பெரிய அளவில் குறைத்துள்ளது. இது தொடர்ந்தால் ஐரோப்பிய பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்லும் எனக் கணித்த நிலையில் தற்போது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

மறுநிதியளிப்பு விகிதம்

மறுநிதியளிப்பு விகிதம்

ஐரோப்பிய மத்திய வங்கி ஜூலை விகித உயர்வைத் தொடர்ந்து, ECB அதன் வைப்பு விகிதத்தைப் பூஜ்ஜியத்தில் இருந்து 0.75% ஆக உயர்த்தியது மற்றும் அதன் முக்கிய மறுநிதியளிப்பு விகிதத்தை 1.25% ஆக உயர்த்தியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

European Central Bank raises key interest rates by 75 basis points

European Central Bank raises key interest rates by 75 basis points. after July rate hike, the ECB raised its deposit rate to 0.75% from zero percentage and lifted its main refinancing rate to 1.25 percent

Story first published: Thursday, September 8, 2022, 22:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.