பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் HDFC வங்கி ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்துள்ள நிலையில் தற்போது புதிதாக எஸ்எம்எஸ் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எஸ்எம்எஸ் வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள அக்கவுண்ட் பேலன்ஸ் உள்பட பல்வேறு தகவல்களை உடனடியாக பெற்று கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே வாரத்தில் 2 முறை உயர்த்தப்பட்ட வட்டி: HDFC வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்

எஸ்.எம்.எஸ் வங்கி
HDFC வங்கி புதிய எஸ்.எம்.எஸ் வங்கி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இனி HDFC வாடிக்கையாளர்கள் 24/7 x 365 என்ற பரந்த அளவிலான வங்கி சேவைகளை எளிதில் பெறலாம். HDFC வங்கி வாடிக்கையாளர்கள் இனி கணக்கு இருப்பு தகவல்கள் பெற, கடன்களுக்கு விண்ணப்பிக்க, கிரெடிட் கார்டுகளை நிர்வகிக்க, காசோலை கோரிக்கை ஆகியவைகளை எஸ்.எம்.எஸ் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொடங்குவது எப்படி?
இதுகுறித்து HDFC வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வங்கி சேவைகள் இப்போது மிகவும் எளிமையாக உள்ளது. நீங்கள் எங்கிருந்தாலும், 24 மணிநேரமும் வங்கி சேவைகளை பெறலாம். அதாவது 24/7 x 365 என சேவையை பெறலாம். எஸ்.எம்.எஸ் சேவையை தொடங்குவதற்கு, 7308080808 என்ற எண்ணுக்கு “Register” கஸ்டமர் ஐடியின் கடைசி 4 இலக்கங்கள் “கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்” என்று SMS அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.

வேறு சில வழிகள்
HDFC வங்கிக்கு 7308080808 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பதிவு செய்தாலும் எஸ்எம்எஸ் வங்கி சேவையை உடனடியாக பெற முடியும். அதேபோல் எஸ்எம்எஸ் வசதியை பெற வங்கிக்கு சென்று பதிவு செய்ய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தும் இந்த சேவையை பெறலாம்.

வரப்பிரசாதம்
இந்த புதிய சேவையின் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ் வங்கி சேவையை பெற்று பாஸ்வேர்டை நினைவில் வைத்து கொள்வதில் இருந்தும், கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் தட்டச்சு செய்வதிலிருந்து விடுபடுவார்கள். இந்த வசதி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு
நீங்கள் எஸ்எம்எஸ் வசதிக்கு பதிவு செய்த பிறகு, உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வங்கியிலிருந்து ஒரு எஸ்எம்எஸ் வரும். அதில் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வசதி குறித்த மேலும் விவரங்களுக்கு hdfcbk.io/k/DUvOddFMOtz என்ற இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம் என HDFC வங்கி தனது வாடிக்கையாளருக்கு தெரிவித்துள்ளது.
HDFC Bank Introduces New SMS Banking Facility, Know How To Apply Here
HDFC Bank Introduces New SMS Banking Facility, Know How To Apply Here | HDFC வங்கியின் புதிய எஸ்.எம்.எஸ் வசதி.. விண்ணப்பம் செய்வது எப்படி?