தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ் வெற்றி

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்போது உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த முறையும் தற்போது தலைவராக உள்ள இயக்குனர் கே.பாக்யராஜ் மீண்டும் தலைவராக போட்டியிடுகிறார். எதிரணியில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இந்த தேர்தல் காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை, வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறுகிறது.

பாக்யராஜ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். துணைத் தலைவராக ஜி.கண்ணன், காரைக்குடி நாராயணன் போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளர் பதவிக்கு பாலசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், ரத்னகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்களாக, பாபுகணேஷ், அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், ஹேமமாலினி, ஜெயப்பிரகாஷ், பட்டுகோட்டை பிரபாகர், ராஜா, ராஜா கார்த்திக், ராஜேஷ்வர், சேகர், வேல்முருகன், பா.விஜய் ஆகியோர் போட்டியிருகின்றனர்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான வசந்தம் எழுத்தாளர்கள் அணியில், தலைவர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டியிடுகிறார். துணைத் தலைவராக மனோபாலா, ரவிமரியா போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு மனோஜ்குமார், பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு மதுரை தங்கம், பிரபாகர், ரங்கநாதன், சண்முகசுந்தரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்களாக, யுரேகா, பேரரசு, பொன்ராம், ராதாரவி, சாய்ரமணி, சாந்தகுமார், சரண், ஷரவணன் சுப்பையா, சினேகன், சிங்கம்புலி, ஏ,வெங்கடேஷ், விவேகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 350 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர் உட்பட 21 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடையும் என்றும் இரவு 9 மணிக்குள் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.