மைசூரு, மைசூரு வனப்பகுதியில், திறந்தவெளியில் காலைக்கடன் கழித்தவரை, கரடி கடித்து குதறிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் மைசூருவில் இருக்கும் லிங்காபுரா கிராமத்தில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இது, நாகரஹொளே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இக்கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரா, 40, என்பவர், நேற்று அதிகாலை, அருகில் உள்ள திறந்தவெளி பகுதிக்கு சென்று காலைக் கடனுக்காக அமர்ந்தார்.
அப்போது, அங்கு வந்த ஒரு கரடி, அவரது இடுப்பு பகுதியை கடித்துக் குதறியது.வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டவரை, அக்கம் பக்கத்தில் காலைக் கடன் கழித்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டி அவரை மீட்டனர்.
படுகாயம் அடைந்த ராமசந்திராவை, மைசூரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரது இடுப்பு, கை, கால்கள், முகம் என உடலின்பல பகுதிகளில் கரடி கடித்து குதறியதுடன், நகங்களாலும் கீறி காயப்படுத்தி இருந்தது. தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், கிராமத்தினர் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்கும்படி அறுவுறுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement