துரைமுருகன் விழாவில் திடீர் மின்தடை: மின்வாரிய அதிகாரிகளுக்கு தண்டனை!

வேலூர் மாவட்டம், காட்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

விழா மேடையில் அமைச்சர் துரைமுருகன் தனது பள்ளி கால நினைவுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ நந்தகுமார் ஆகியோர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனாலும், சிறிது நேரம் மைக் அருகே நின்றுக்கொண்டிருந்த அமைச்சர் துரைமுருகன் நாற்காலியில் வந்து அமர்ந்துக்கொண்டார். 15 நிமிடங்கள் ஆன பிறகும் மின்சாரம் வராததால் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கிவிட்டு சென்றுவிட்டார்.

ரயில் நிலையம் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது -கோ.வி.செழியன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்ட விவகாரம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, அமைச்சர் பங்கேற்ற விழாவில் மின்தடை ஏற்பட்ட விவகாரத்தில் மின் வாரிய உதவி பொறியாளர்கள் ரவி கிரண் மற்றும் சிட்டிபாபு ஆகியோர் வடுகன்தாங்கல் துணை மின் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அமைச்சர் விழாவில் மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கும் அரசு பொதுமக்களுக்கு இந்த நிலை ஏற்படும் போது ஏன் வழங்குவதில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.