ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்காலம் என்ன..? முகேஷ் அம்பானி எடுக்கப்போகும் முடிவு..!

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் வைத்து அதிகப்படியான முதலீடுகள் திரட்டிய நாளில் இருந்து எப்போது ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்து ஐபிஐ வெளியிடப்போகிறது என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

இதேவேளையில் முகேஷ் அம்பானி தனது 3 பிள்ளைகளுக்கு யாருக்கு எந்தத் துறை, எந்த வர்த்தகம் எனக் கடந்த வருடாந்திர கூட்டத்தில் கிளியர் ஆக அறிவித்த நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பான ஆகியிருக்கும் முக்கியமான எதிர்பார்ப்பாக இருப்பது ஐபிஓ தான்.

இப்படியிருக்கையில் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்காலம் என்ன..?

அடுத்த 2- 3 காலாண்டுகளில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 4 பங்குகளை வாங்கி போடுங்க..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்த 2-3 வருடத்தில் வர்த்தகம் தனித் தனியாகப் பிரிந்து ஐபிஓ வெளியிடும் என அறிவித்துள்ளது. இதனால் தற்போது பட்டியலிடப்பட்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனத்தின் நிலையும், முதலீட்டாளர்கள் நிலையும் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை வைத்து பெரிய அளவிலான முதலீட்டை திரட்டிய நிலையில் எண்ணெய் வர்த்தகத்தை வைத்து முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்ட சவுதி ஆராம்கோ உடன் டீல் பேசி வந்தது.

O2C பிரிவு
 

O2C பிரிவு

இந்த முதலீட்டுக்காக ரிலையன்ஸ் தனது எண்ணெய் மற்றும் அதைச் சார்ந்து இருக்கும் வர்த்தகம், சொத்துக்கள், ஊழியர்கள் என அனைத்தையும் தனியாக O2C பிரிவுக்குக் கொண்டு வந்ததது. ஆனால் ஆராம்கோ கடைசியில் முதலீடு செய்ய முடியாது என வெளியேறியது மறக்க முடியாது.

ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல், நியூ எனர்ஜி

ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல், நியூ எனர்ஜி

இதேபோல் தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல், நியூ எனர்ஜி ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரித்து O2C பிரிவுடன் சேர்த்து 4 நிறுவனங்களாக ஐபிஓ வெளியிட வாய்ப்பு உள்ளது. இதேபோல் ஐபிஓ-வை மும்பை பங்குச்சந்தையிலும் செய்யலாம், வெளிநாட்டிலும் செய்ய வாய்ப்பு உள்ளது.

 4 நிறுவனங்கள்

4 நிறுவனங்கள்

இப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தை 4 பிரிவுகளாக உடைந்து ஐபிஓ வெளியிட்டால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் ஹோல்டிங் நிறுவனமாக மாறும். ஹோல்டிங் நிறுவனம் என்றால் தற்போது டாடா குழுமத்திற்கு டாடா சன்ஸ் எப்படியோ அப்படித் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

3 நிறுவனங்கள்

3 நிறுவனங்கள்

முகேஷ் அம்பானி ஹோல்டிங் கான்செப்ட்-ஐ விரும்பவில்லை எனில் நியூ எனர்ஜி மற்றும் O2C வர்த்தகங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரிவுக்குக் கீழ் வைத்துக்கொண்டு ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் ஆகியவற்றுடன் சேர்த்து 3 நிறுவனங்களாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம்.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்கள்

இந்தக் கான்செப்ட்-ஐ முகேஷ் அம்பானி தேர்வு செய்தால் ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் ஆகியவற்றை மட்டும் தனியாகப் பிரித்து ஐபிஐ வெளியிட்டால் போதுமானது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3 ஆகவோ அல்லது 4 ஆகவோ உடைந்தால் உரியப் பங்குகளைப் பகிர்ந்து கொடுக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is future of Reliance Industries? Mukesh Ambani Biggest decision; Stockholders to watch closely

What is the future of Reliance Industries? Mukesh Ambani Biggest decision ever to make for better reorganization of the company; Stockholders need to watch closely reliance and Mukesh Ambani’s structure, succession and segregation plan.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.