283 கட்சிகள் செயல்படாதவை| Dinamalar

சென்னை :தமிழகத்தைச் சேர்ந்த 14 கட்சிகள் உட்பட, 253 பதிவு செய்த கட்சிகள் செயல்பாடு இல்லாதவை என, தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது.பீஹார், டில்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழகம், தெலுங்கானா, உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத, 253 அரசியல் கட்சிகள், செயல்படாத கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக அக்கட்சி நிறுவனர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, எந்த பதிலும் பெறப்படவில்லை.

இக்கட்சிகள், 2014, 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியல் கட்சியாக இருப்பதற்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.இக்கட்சிகளில், 66 கட்சிகள், பொதுவான சின்னம் கேட்டு பெற்றன. ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை. இதன் காரணமாக, அக்கட்சிகள் செயல்படாத கட்சிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் 86 கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.செயல்படாத கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளவை, தேர்தலில் சின்னம் பெற சலுகை கோர முடியாது. இக்கட்சிகள் 30 நாட்களுக்குள் தேர்தல் கமிஷனை, உரிய ஆவணங்களுடன் அணுக வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.