சென்னை: மருத்துவத் துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மருத்துவத் துறையில் கடைநிலை ஊழியர்களுக்கு எட்டு மணி நேர பணி மட்டுமே வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரித்த உயர்நீதிமன்றம் கடைநிலை ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மருத்துவத் துறை கடைநிலை ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று 3 ஷிஃப்டாக பணியாற்றும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ஷிஃப்டில் 50 சதவீத பேரும், 2வது ஷிஃப்டில் 25 சதவீத பேரும், 3வது ஷிஃப்டில் 25 சதவீத பேரும் பணியாற்றுவார்கள். அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் பணி புணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.