மனைவி ஆசியுடன் திருநங்கையை இரண்டாவது திருமணம் செய்த இளைஞர்! புகைப்படங்கள்


திருமணமான இளைஞர் ஒருவர் தனது மனைவியின் சம்மதம் மற்றும் ஆசியுடன் திருநங்கையை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த வினோத சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள துர்குடி கிராமத்தை சேர்ந்தவர் பகிரா நைல் (30). இவருக்கும் குணி என்ற பெண்ணிற்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சில காலமாக பகிராவுக்கு, சங்கீதா என்ற திருநங்கையுடன் காதல் ஏற்பட்டது.
இதை பகிராவின் மனைவி குணி அறிந்தார். ஆனால் இது குறித்து தன் கணவரிடம் எதிர்ப்பையோ அல்லது மனக்கசப்பையோ அவர் காட்டவில்லை.

மனைவி ஆசியுடன் திருநங்கையை இரண்டாவது திருமணம் செய்த இளைஞர்! புகைப்படங்கள் | Man Marries Woman With His Wife Blessings

news18

அதற்கு பதிலாக கணவருடன் அது தொடர்பில் விவாதித்தார்.
பின்னர் பகிரா – சங்கீதா காதலை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து அவர் ஆசியுடன் பகிராவுக்கும், சங்கீதாவுக்கும் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்றது.

சங்கீதா கூறுகையில், பகிரா குடும்பத்தில் உள்ள அனைவரும் என்னை அரவணைத்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது என கூறினார்.

இருந்த போதிலும், பகிரா – குணி திருமணம் சட்டப்பூர்வமாக தொடர்வதால் இந்த திருமணம் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மனைவி ஆசியுடன் திருநங்கையை இரண்டாவது திருமணம் செய்த இளைஞர்! புகைப்படங்கள் | Man Marries Woman With His Wife Blessings

 Special Arrangement



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.