அமெரிக்காவில் பணவீக்க விகிதமானது எதிர்பார்ப்பினை விட அதிகரித்துள்ள நிலையில், இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம் என்ற நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ஜப்பானின் யென் மதிப்பானது 24 வருட சரிவினைக் கண்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய வங்கியானது வரவிருக்கும் கூட்டத்தில் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.
அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

யென் மதிப்பு சரிவு
ஆசிய அமர்வில் யென்னின் மதிப்பானது 144.965 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த புதன் கிழமையன்று 144.99 என்ற லெவலுக்கு அருகில் சென்றது. இது 1998-க்கு பிறகு இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
இது அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீட்டினை தொடர்ந்து, டாலரின் மதிப்பு, பத்திர சந்தை என உச்சம் தொட்டு வருகின்றன. இது டாலருக்கு எதிரான நாணயங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

மேலும் சரியலாம்
இதற்கிடையில் வரவிருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டாலரின் மதிப்பானது மேற்கொண்டு ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு மற்ற கரன்சிகளில் வீழ்ச்சியினை தூண்டலாம்.

பணவீக்கம் ரொம்ப மோசம்
நோமுராவின் பொருளாதார நிபுணர்கள் வட்டி விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் பணவீக்கம் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதை நிபுணர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது இன்னும் வட்டி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் மத்திய வங்கியின் நடவடிக்கை
யென், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் உள்ளிட்ட ஆறு முக்கிய கரன்சிகளுக்கு எதிராக 109.750 என்ற லெவலில் மாற்றப்பட்டது. இது ஒரே இரவில் 1.44% என்ற அளவுக்கு உயர்ந்து காணப்படுகின்றது.
ஜப்பான் கரன்சியின் இந்த வீழ்ச்சிக்கு மத்தியில் யென்னின் மதிப்பு தொடர்ந்து சரிவினைக் கண்டு வருவதை காண, மத்திய வங்கியானது உன்னிப்பாக கவனித்து வருகின்றது. . மேற்கொண்டு கரன்சி மதிப்பு அதிகரிப்பு ஏற்ற நடவடிக்கையினை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாயின் நிலவரம் என்ன?
வளர்ந்து வரும் நாடான இந்திய கரன்சியான ரூபாயின் மதிப்பானது முன்னதாக 41 பைசா சரிவினைக் கண்டு, 79.58 ரூபாயாக காணப்பட்டது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு கட்டாயம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யென் மதிப்புடன் ஒப்பிடும் இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் சரிவினைக் காணவில்லை எனலாம். எனினும் இந்திய பொருளாதாரம் வேறு, ஜப்பானின் பொருளாதாரம் வேறு என்பதும் கவனத்தில் கொள்ள தக்கது.
Japan’s Yen falls to 24-year low against US dollar
Japan’s yen has hit a 24-year low against the US dollar.