
தந்தை கார்த்திக் உடன் கவுதம் கார்த்திக் குஸ்தி
கடல், வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கவுதம் கார்த்திக். தற்போது சிம்புவுடன் இணைந்து பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது தந்தையும் நடிகருமான கார்த்திக்குடன் குத்துச்சண்டை விளையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன் பின்னணியில் அமரன் படத்தில் கார்த்திக் பாடி இருந்த, வெத்தல போட்ட சோக்குல என்ற பாடல் ஒலிக்கிறது.
‛‛என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்னுடைய தந்தையே நண்பராக இருப்பதுதான். எப்போதும் என்னை ஊக்கமளிக்கும் அவர், சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்'' என்று பதிவிட்டுள்ளார் கவுதம் கார்த்திக்.