மும்பை:
பாலிவுட்டின்
முன்னணி
நட்சத்திரங்களான
ரன்பீர்
கபூர்,
ஆலியா
பட்
ஜோடி,
கடந்த
ஏப்ரல்
மாதம்
திருமணம்
செய்துகொண்டனர்.
திருமணத்திற்குப்
பின்னர்
ரன்பீர்
கபூர்,
ஆலியா
பட்
நடிப்பில்
வெளியான
பிரம்மாஸ்திரம்
திரைப்படம்
மிகப்
பெரிய
வெற்றிப்
பெற்றுள்ளது.
இந்நிலையில்,
பொதுஇடத்தில்
ரன்பீர்
கபூரும்
ஆலியா
பட்டும்
ரொமான்ஸ்
செய்துகொண்ட
வீடியோ
வைரலாகி
வருகிறது.
திருமண
பரிசாகக்
கிடைத்த
ப்ளாக்
பஸ்டர்
ஹிட்
இந்தி
சினிமாவில்
டாப்
ஸ்டாராக
கலக்கி
வரும்
ரன்பீர்
கபூருக்கு
ஏராளமான
ரசிகர்கள்
உள்ளனர்.
அதேபோல்;
ஆலியா
பட்டும்
குறுகிய
காலத்தில்
முன்னணி
நடிகையாக
வலம்
வருகிறார்.
காதலில்
விழுந்த
இருவரும்,
கடந்த
ஏப்ரல்
மாதம்
திருமணம்
செய்துகொண்டனர்.
பிரம்மாண்டமாக
நடைபெற்ற
இந்த
திருமணத்தில்
இந்தி
திரையுலகமே
திரண்டு
வந்து
கலந்துகொண்டது.
அதேநேரம்
இருவரும்
இணைந்து
‘பிரம்மாஸ்திரம்’
படத்தில்
நடித்து
வந்தனர்.
கடந்த
வாரம்
வெளியான
இந்தப்
படம்
பாய்காட்டை
கடந்து
சூப்பர்
டூப்பர்
ஹிட்
அடித்துள்ளது.

உற்சாகத்தில்
ரன்பீர்
கபூர்,
ஆலியா
பட்
ஜோடி
‘பிரம்மாஸ்திரம்’
திரைப்படத்திற்கு
எதிராகவும்,
ரன்பீர்
கபூருக்கு
எதிராகவும்
நெட்டிசன்கள்
கடுமையாக
ட்ரோல்
செய்து
வந்தனர்.
பிரம்மாஸ்திரம்
படம்
கண்டிப்பாக
தோல்வியடையும்
எனவும்
அவர்கள்
பிரசாரம்
செய்தனர்.
ஆனால்,
அந்த
தடைகளை
எல்லாம்
முறியடித்துள்ள
‘பிரம்மாஸ்திரம்’
நல்ல
வரவேற்பை
பெற்றுள்ளதோடு,
பாக்ஸ்
ஆபிஸிலும்
தரமான
சம்பவம்
செய்துள்ளது.
திருமண
பரிசாக
கிடைத்துள்ள
இந்த
வெற்றியால்,
ரன்பீர்
கபூர்,
ஆலியா
பட்
ஜோடி
செம்ம
உற்சாகமாக
காணப்படுகின்றனர்.

ரன்பீர்
கபூர்
மீது
கை
வைத்த
ஆலியா
பட்
பிரம்மாஸ்த்திரம்
திரைப்படம்
முதல்
வாரத்தில்
உலகம்
முழுவதும்
250
கோடி
ரூபாய்
வசூலித்துள்ளதாகக்
கூறப்படுகிறது.
இந்நிலையில்,
மும்பையில்
உள்ள
தர்மா
புரொடக்சன்ஸ்
சென்றிருந்த
ரன்பீர்
கபூர்,
ஆலியா
பட்
ஜோடி,
அலுவலகம்
வெளியே
போட்டோவுக்கு
போஸ்
கொடுத்தனர்.
அப்போது
ரன்பீர்
கபூரின்
தலை
முடியை
ஆலியா
பட்
சரிசெய்ய
முயன்றார்.
ஆனால்,
அதை
விரும்பாத
ரன்பீர்
கபூர்,
ஆலியா
பட்டின்
கையை
மெதுவாக
தடுத்தார்.
இந்த
வீடியோ
வைரலானதை
தொடர்ந்து,
ரசிகர்கள்
இதனை
ட்ரோல்
செய்து
வருகின்றனர்.

இதுக்கே
காதல்
இல்லைன்னு
சொன்னா
எப்படி
இந்த
வீடியோவை
கையிலெடுத்துள்ள
நெட்டிசன்கள்,
ரன்பீருக்கு
ஆலியா
பட்
மீது
காதல்
இல்லை
எனவும்,
அதனால்
தான்
அவர்
பொது
இடத்தில்
தலையில்
கை
வைத்தது
விரும்பவில்லை
என்றும்
கமெண்ட்ஸ்
அடித்து
வருகின்றனர்.
இதுக்கெல்லாமா
இப்படி
உருட்டுவீங்கன்னு
கிளம்பியுள்ள
சில
ஆண்கள்,
பசங்க
எப்பவுமே
அவங்க
முடி
மேல
யாரையும்
கைவைக்க
விட
மாட்டாங்க,
அது
அவங்களுக்கு
புடிக்கவே
புடிக்காது
என
ரன்பீர்
கபூருக்கு
ஆதரவாக
கமெண்ட்ஸ்
செய்து
வருகின்றனர்.
இதுக்காக
காதல்
இல்லைன்னு
சொல்றதெல்லாம்
ரொம்ப
ஓவர்
என
கலாய்த்து
வருகின்றனர்.