பாதுகாப்பாக இந்தியா வரும் சீட்டாக்கள்.. விமானத்தில் என்னென்ன ஏற்பாடுகள் தெரியுமா?

போபால்: நமீபியாவில் இருந்து சீட்டாக்கள் இந்தியா கொண்டுவரப்பட உள்ள நிலையில், சீட்டாக்களுக்கு பயணத்தின் போது எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விமானத்தின் உள்ளே மரக்கூண்டு மற்றும் வெட்னரி டாக்டர்கள் என முன்னெச்செரிக்க ஏற்பாடுகள் தீவிமாக செய்யப்பட்டுள்ளன.

சிறுத்தைகளில் மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கினமானனது சீட்டா (சிவிங்கி புலிகள்). மற்ற சிறுத்தைப்புலி இனங்களை காட்டிலும் இது சற்று வித்தியாசமானது.

பின்னங்கால்கள் முன் கால்களை விட சற்று நீளமாக இருப்பதால் இந்த சீட்டாக்கள் மிக வேகமாக ஓடி சென்று இரையை பிடிக்கும் தன்மை கொண்டது.

சீட்டா வகை சிறுத்தைப்புலிகள்

இந்தியாவில் ஒரு காலத்தில் இந்த வகை சீட்டாக்கள் அதிக அளவில் இருந்தன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உள்ளிட்டோர் பொழுதுபோக்குக்காக சீட்டாக்களை வேட்டையாடினர். இவ்வாறு இந்த இனங்கள் மெதுவாக அழியத்தொடங்கின. இந்தியாவில் சீட்டாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதில் இறுதியில் இந்தியாவிலேயே ஒரு ஒரு சீட்டா மட்டும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நமீபியாவிடம் ஒப்பந்தம்

நமீபியாவிடம் ஒப்பந்தம்

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படாத மாநிலமாக இருந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் மட்டும் கடந்த 1947-ம் ஆண்டு ஒரு சீட்டா தென்பட்டது. ஆனால் அந்த சீட்டாவும் நாளடைவில் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் கடந்த 1952-ஆம் ஆண்டில் சீட்டா இந்தியாவில் எங்கும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வரை சீட்டா வகை புலிகள் இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லை. எனவே இந்தக் குறையை போக்குவதற்கு திட்டமிட்ட இந்தியா இதற்காக நமீபியாவிடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

8 சீட்டாக்கள்

8 சீட்டாக்கள்

இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவுக்கு 5 ஆண் சீட்டாக்கள் மற்றும் 3 பெண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட உள்ளன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருந்து இந்த 8 சீட்டாக்கள் இந்தியா கொண்டு வரப்படுகிறது. இந்த 8 சீட்டாக்களையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக கடந்த 2 மாதங்களாக முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வந்தது. குறிப்பாக சீட்டாக்களை விட உள்ள மத்திய பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டனர். இதில், அந்த பூங்காவை சுற்றியுள்ள பகுதியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளான நாளை சீட்டாக்கள் இந்தியா வந்தடைந்து மத்திய பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடப்படுகிறது. இந்த சீட்டாக்களை பிரதமர் மோடியே அந்த பூங்காவில் விடுவார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து செய்யப்பட்டு விட்டனர். இதற்கிடையே சீட்டாக்களை இந்தியா கொண்டு வர நேற்று இந்தியாவின் சார்பில் புலி முகம் கொண்ட தோற்றத்தில் சார்ட்டர் சரக்கு விமானம் (போயிங் 747) நமீபியா சென்றடைந்தது.

விமானத்தில் ஏற்பாடுகள்

விமானத்தில் ஏற்பாடுகள்

அந்த விமானம் சீட்டாக்களை ஏற்றிகொண்டு இந்தியா வர தயார் நிலையில் உள்ளது. மேலும் அந்த விமானத்தில் சீட்டாக்கள் இருப்பதற்கான வசதிகள் அனைத்தும் அந்த விமானத்தில் செய்யப்பட்டுள்ளது. சீட்டாக்களை கொண்டு வருவதற்காகவே அந்த விமானத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக விமானத்தில் உள்ளே பல அறைகள் இருக்கின்றனர். ஒருசில அறைகள் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக மரக்கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தொடர்ந்து சீட்டாக்களை கண்காணித்து வருவதற்காக வெட்னரி டாக்டர்கள் விமானத்தில் தனி அறையில் இருக்கின்றனர்.

விமானத்தில் வெட்னரி டாக்டர்கள்

விமானத்தில் வெட்னரி டாக்டர்கள்

விமானம் நடு வானில் பறந்து வரும்போது சீட்டாக்களுக்கு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வெட்னரி டாக்டர்கள் அங்குள்ள அறையில் இருக்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் இந்தியா வந்தடையும் வரை சீட்டாக்களை தொடர்ந்து இவர்கள் கண்காணிப்பர். இதேபோல் விமானத்தில் வரும் போது சீட்டாக்களுக்கு குமட்டல், வேறு ஏதும் இடர்பாடுகள் ஏற்பட கூடாது என்பதற்காக உணவு ஏதும் அளிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

இது குறித்து அந்த திட்டத்தின் தலைவர் எஸ்பி யாதவ் தெரிவிக்கையில், நமீபியாவில் உள்ள சீட்டாக்களை கொண்டு வருவதற்காகவே சார்ட்டர் வகை சரக்கு விமானம் (போயிங் 747) தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தில் கொண்டு வருவதன் மூலம் இடையில் எங்கும் நிறுத்தாமல் நேரடியாக இந்தியா கொண்டு வர முடியும். சீட்டாக்களும் அதிக நேரம் விமானத்தில் இருப்பதும் இதனால் தவிர்க்கப்படும்.

சிறப்பு விமானம்

சிறப்பு விமானம்

எரிபொருள் நிரப்புவதற்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இந்த வகை விமானத்தை தரையிறக்க தேவையில்லை. இதேபோல் சீட்டாக்கள் பூங்காவில் விடப்பட்டாலும் அது எங்கு இருக்கிறது.. எப்படி இருக்கிறது என்பதை கண்காணித்து வருவதற்காக 8 சீட்டாக்களின் கழுத்திலும் செயற்கைக்கோள் ரேடியோ காலர்கள் மாட்டப்படும். ஒவ்வொரு சீட்டாக்களையும் கண்காணிக்க பிரத்யேக குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.